மணிரத்னம் இயக்கத்தில் தயாராகியுள்ள பொன்னியின் செல்வன் இன்று (செப்டம்பர் 30) உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது.
கல்கியின் நாவலும், மாபெரும் தமிழ் காப்பியங்களுள் ஒன்றான பொன்னியின் செல்வன் கதையைத் திரைப்படமாக எடுக்க வேண்டும் என்பது தமிழ் திரையுலகில் எம்.ஜி.ஆர், கமல்ஹாசன் என பலரது கனவாக இருந்து வந்தது.
ஆனால் இயக்குநர் மணிரத்னம் தனது இயக்கத்தின் மூலம் பொன்னியின் செல்வன் படத்தை இரண்டு பாகங்களாக எடுத்துள்ளார்.
லைகா புரொடக்ஷன் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் விக்ரம், கார்த்திக், ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், பார்த்திபன், அதிதி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.
இப்படம் தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய ஐந்து மொழிகளில் உலகம் முழுவதும் இன்று (செப்டம்பர் 30) வெளியானது.
இன்று காலை 4 மணியளவில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் காட்சி வெளியானது.
4 மணி காட்சிக்கு அதிகாலை 3 மணி முதலே ரசிகர்கள் குடும்பத்துடன் திரையரங்கிற்கு வருகை தர ஆரம்பித்து விட்டனர்.
திரையரங்கத்தின் வெளியில் பேனர் வைத்து, மேளதாளம் ஆட்டம் பாட்டத்துடன் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
படம் வெளியானதை ஒரு விழாவாகவே ரசிகர்கள் மாற்றிவிட்டனர்.
நடிகர் ஜெயம் ரவி தனது குடும்பத்துடன் குரோம் பேட்டையில் உள்ள வெற்றி தியேட்டரில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை பார்த்தார். நடிகர் கூல் சுரேஷ் ரோகினி தியேட்டருக்கு குதிரையில் படம் பார்க்க வந்தார்.
“வெந்து தணிந்தது காடு பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு வணக்கத்த போடு” என்ற பதாகையுடன் வந்தார்.
கூல் சுரேஷ் தியேட்டரில் நுழைந்ததும் ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர்.
படம் பார்த்த ரசிகர்கள் பலரும் பொன்னியின் செல்வன் திரைப்படம் நன்றாக உள்ளதாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
நேற்று இரவு முதல் பொன்னியின் செல்வன் திரைப்படம் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங்கில் உள்ளது.
பெரும்பாலான ட்விட்டர் விமர்சனங்கள் பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு நேர்மறையாகவே வந்துள்ளது.
செல்வம்
சிறப்பு கட்டுரை: பொன்னியின் செல்வன் பெண்களின் செல்வனாக காரணம் என்ன?
ஐஸ்வர்யா ராய் மீது பொறாமை கொண்ட மீனா