கொட்டும் கலெக்ஷன்: பாக்ஸ் ஆபிஸை அதிரவைத்த பொன்னியின் செல்வன்
பொன்னியின் செல்வன் திரைப்படம் 50 நாட்களில் ரூ.500 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
லைகா நிறுவனத்துடன் மணிரத்னம் இணைந்து தயாரித்து செப்டம்பர் 30 அன்று திரையரங்குகளில் வெளியான படம் பொன்னியின் செல்வன்.
விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஜெயராம், பிரகாஷ் ராஜ், கிஷோர், ஆகியோர் நடிப்பில் மணிரத்னம் இயக்கிய இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார்.
தமிழ் சினிமா பாக்ஸ் ஆபீஸ் வரலாற்றில் தமிழகத்தில் அதிகம் வசூல் செய்த திரைப்பட பட்டியலில் 227 கோடி ரூபாய் மொத்த வசூல் செய்து முதல் இடத்தில் இடம்பெற்றுள்ளது.
இந்த படத்தின் வெற்றியால் பொன்னியின் செல்வன் நாவலில் இடம் பெற்றுள்ள இடங்களில் சுற்றுலா தொழில் பெரும் வளர்ச்சி அடைந்துள்ளது. இந்த நிலையில், பொன்னியின் செல்வன் நேற்று (18.11.2022) ஐம்பது நாட்களை திரையரங்குகளில் நிறைவு செய்துள்ளது.
முதல் வாரத்தை திரையரங்குகளில் ஒரு திரைப்படம் கடந்து இரண்டாவது வாரம் ஓடுவது நிச்சயமற்ற சூழலில், பல்வேறு எதிர்மறையான விமர்சனங்களை எதிர்கொண்ட பொன்னியின் செல்வன் திரையரங்கைத் தொடர்ந்து அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் கடந்த நவம்பர் 4-ம் தேதி படம் வெளியிடப்பட்டது.
படம் வெளியாகி நேற்றுடன் 50 நாட்களை கடந்து விட்டதை முன்னிட்டு நடிகர் விக்ரம் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘பொன்னியின் செல்வன்’ படம் உலக அளவில் ரூ.500 கோடி வசூலித்ததை அறிவிக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு, அத்துடன் 50 நாள் போஸ்டரையும் பகிர்ந்துள்ளார்.
அதில், ‘என்னைக் கிள்ளி, யாராவது இது கனவு இல்லை என்று சொல்லுங்களேன்” என்று பதிவிட்டுள்ளார்.
ராமானுஜம்
உலக கோப்பை தோல்வி: பிசிசிஐ எடுத்த அதிரடி முடிவு!
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!