பொன்னியின் செல்வன் இரண்டு பாகமாக எடுத்தது ஏன்?: மணிரத்னம்

சினிமா

மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் உலகம் முழுவதும் கடந்த வருடம் வெளியாகி பெரும்வெற்றிபெற்றது. பொன்னியின் செல்வன் – 2 ஏப்ரல் 28 அன்று உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

எழுத்தாளர் கல்கி எழுதி வெளியான ‘பொன்னியின் செல்வன்’ நாவலை இயக்குநர் மணிரத்னம் இரண்டு பாகங்களாக திரைப்படமாக உருவாக்கி இருக்கிறார்.

விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, பிரகாஷ்ராஜ், பார்த்திபன், ரஹ்மான்,துலிபாலா உட்பட பலர் நடித்துள்ளனர்.

படத்தை விளம்பரப்படுத்தும் வகையில் சென்னை, கோவை, கொச்சி, ஹைதராபாத், மும்பை, டெல்லி ஆகிய இடங்களில் படக்குழு மாணவர்களையும், ஊடகங்களையும் சந்தித்து வருகிறது.

ஹைதராபாத்தில் நடந்த இந்த சந்திப்பில் இயக்குநர் மணி ரத்னம் பேசுகையில், “நான் ராஜமெளலிக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். ‘பாகுபலி’ இரண்டு பாகங்களாக அவர் உருவாக்காவிட்டால் நானும் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தை இரண்டு பாகங்களாக உருவாக்கி இருக்க மாட்டேன்.

இது எனக்கு புது பாதையை உருவாக்கி தந்தது. நிறைய வரலாற்று கதைகளை எடுக்க முடியும் என்ற நம்பிக்கையை சினிமாத்துறையில் பலருக்கும் கொடுத்தது. இதை அவரை சந்தித்தும் நான் சொல்லி இருக்கிறேன்” என்றார்.

திருப்பதி: மே மாத தரிசன ரூ.300 டிக்கெட் இன்று வெளியீடு!

கிச்சன் கீர்த்தனா: கத்திரிக்காய் வற்றல்

+1
0
+1
1
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

1 thought on “பொன்னியின் செல்வன் இரண்டு பாகமாக எடுத்தது ஏன்?: மணிரத்னம்

  1. I am now not positive where you’re getting your information, but great topic. I needs to spend a while finding out much more or understanding more. Thank you for wonderful information I was on the lookout for this info for my mission.

    https://malagaldia.com/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *