பொன்னியின் செல்வன் வசூல் ரிப்போர்ட்!

சினிமா

லைக்கா நிறுவனத்தின் சார்பில் சுபாஷ்கரன் அல்லிராஜாவுக்காக மெட்ராஸ்டாக்கிஸ் முதல் பிரதி அடிப்படையில் தயாரித்த படம் பொன்னியின் செல்வன்1, 2 பாகங்கள்.

480 கோடி ரூபாய் முதலீட்டில் 140 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்ற இந்த படத்திற்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்ய ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார்.

பன்மொழி படமாக உலகம் முழுவதும் செப்டம்பர் 30 அன்று வெளியானது.

விக்ரம், ஜெயம்ரவி, கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா பட்சன், சரத்குமார், ஜெயராம், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ஜெயசித்ரா என கோடம்பாக்கத்தில் பிசியான, ஓய்வில் இருக்கும் அனைத்து கலைஞர்களும் நடித்திருக்கும் படம் பொன்னியின் செல்வன்.

தமிழர் கலாச்சாரம், கங்கைகொண்டான், கடாரம் வென்ற சோழப்பேரரசின் வரலாறு என படம் விளம்பரப்படுத்தப்பட்டது.

பாகுபலி, கேஜிஎஃப், புஷ்பா போன்ற படங்கள் எல்லாம் கற்பனை கதாபாத்திரங்கள் நிரம்பியது.

கிராபிக்ஸ், பிரம்மாண்டங்கள் என விளம்பரம் செய்யப்பட்டு படிப்படியாக வசூல் அதிகரித்து வெற்றி பெற்றதுடன் பாக்ஸ் ஆபீசில் வரலாறு படைத்த படங்களாகும்.

இதில் இருந்து முற்றிலும் வேறுபட்டு தமிழ் மன்னன் – சோழர்கள் வரலாறு என பொன்னியின் செல்வன் திரைப்படம் முன் நிறுத்தப்பட்டது.

ஒரு கட்டத்தில் தமிழர்கள் இது தங்கள் பெருமை பேசும்படம் என்கிற மனநிலைக்கு உள்ளாக்கப்பட்டனர்.

படம் வெளியாவதற்கு முன் முன்பதிவு அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களில் திருப்பூர் நகரில் 6000ம் டிக்கெட்டுகளும், நானே வருவேன் படத்திற்கு 500 டிக்கெட்டுகளும் முன்பதிவில் விற்பனையானது.

வெளி நாட்டை காட்டிலும் தமிழ்நாட்டில் வேகமாக டிக்கெட் விற்பனையானதற்கு காரணம் படம் வெளியாகும் நாளில் இருந்து ஒரு வார காலத்திற்கு விடுமுறை காலம்.

அந்த காலத்தில் திரைப்படம் பார்க்க விரும்புபவர்களின் முதல் விருப்பம்”பொன்னியின் செல்வன்” படமாக இருந்தது.

முன்பதிவு மூலம் 100 கோடி ரூபாய்க்கு டிக்கெட்டுகள் விற்பனை ஆகியிருப்பதாக கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் வெள்ளி, சனி, ஞாயிறு என மூன்று நாட்களில் 70 கோடி ரூபாய் மொத்த வசூல் ஆகியிருக்கிறது.

தயாரிப்பு நிறுவனம் முதல் நாள் உலகம் முழுவதும் மொத்த வசூல் 80 கோடிக்கும் மேல் என அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.

தமிழகம், மற்றும் தமிழர்கள் வசிக்கும் நாடுகளில் பொன்னியின் செல்வன் வசூல் ஏறுமுகத்தில் உள்ளது. மற்ற மொழிகளில் வசூல் குறைந்துவருகிறது தமிழகத்தில் விக்ரம் படம் ஓடி முடிந்தபோது 90 கோடி ரூபாய் தயாரிப்பாளருக்கு வருவாய் கிடைத்தது.

தமிழ்நாட்டில் எந்த ஒரு படமும் இந்தளவு வருவாயை இதற்கு முன் பெற்றது இல்லை. இதனை எதிர்காலத்தில் எந்த ஒரு தமிழ் படமும் சமன் செய்ய முடியாது என கூறப்பட்டு வந்தது.

பொன்னியின் செல்வன் இந்த சாதனையை முறியடிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இராமானுஜம்

ஜெய்ஸ்ரீராம் கோஷத்துடன் வெளியானது பிரபாஸின் ‘ஆதிபுருஷ்’ டீசர்!

டாப் 10 செய்திகள் : இதை மிஸ் பண்ணாதீங்க..!

+1
0
+1
1
+1
0
+1
6
+1
2
+1
3
+1
2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *