தற்போதைய சினிமா வசூல் கணக்குகளை வெளியிடுகிறபோது முந்தைய படங்களின் வசூலை முறியடித்தது என்றே குறிப்பிடப்படுகின்றன. ஆனால் இது சரியான அணுகுமுறை இல்லை என்று சினிமா வணிகம் சார்ந்த விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.
களத்தில் போட்டிக்கு எவரும் இல்லாமல் வெற்றிக் கோட்டை தொடுவது சாதனை இல்லை என்று கூறுபவர்களும் உண்டு.
“ ‘விக்ரம்’ வசூல் சாதனையை முதல் வாரத்திலேயே முறியடித்துவிட்டது ’பொன்னியின் செல்வன்’ ” என்பதுதான் தமிழ் சினிமா வட்டாரத்தின் தலைப்பு செய்தியும், பிரதான விவாதமாகவும் தற்போது இருந்து வருகிறது.
“ ‘விக்ரம்’ பட சாதனையை ’பொன்னியின் செல்வன்’ முறியடித்துள்ளது என்பது சந்தோஷம்தான்.
அதைக் கொண்டாடத்தான் நான் ’பொன்னியின் செல்வன்’ டீமுடன் வந்துள்ளேன். ஆரோக்கியமான போட்டி இருப்பதில் தவறில்லை.
தமிழ் சினிமாவின் பொற்காலம் தொடங்கிவிட்டது” என்று கமல்ஹாசனே தெரிவித்திருந்தார்.
’விக்ரம்’ படத்தை வசூலில் எப்படி வென்றது ’பொன்னியின் செல்வன்’ தமிழகத்தில் திரைப்படத்தின் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் கோவை விநியோக பகுதியில் ’விக்ரம்’ முதல் வார முடிவில் 14 கோடி ரூபாய் மொத்த வசூல் செய்தது. ’பொன்னியின் செல்வன்’ 18 கோடி ரூபாய் வசூல் செய்திருக்கிறது.
நடிகர்கள், இயக்குநர், தயாரிப்பு நிறுவனம் என்கிற ஒப்பீட்டு அளவில் ’விக்ரம்’ – ’பொன்னியின் செல்வன்’ என இரண்டு படமும் சம பலம் உள்ளவைதான்.
ஆனால் ’விக்ரம்’ வசூலை முதல் வாரத்தில் பின்னுக்குத் தள்ளி கூடுதலாக 4 கோடி ரூபாய் வசூல் என்பது இன்றைய சினிமாவில் எளிதான காரியமில்லை.
இதே நிலைமைதான் தமிழ்நாடு முழுவதும். முதல் வார முடிவில் ’விக்ரம்’ 96 கோடி ரூபாயை மொத்த வசூலாக பெற்று சாதனை படைத்தது.
இதனை அவ்வளவு எளிதாக எதிர்காலத்தில் முறியடிக்க முடியாது என்றே கூறப்பட்டது. ஆனால் ’விக்ரம்’ படத்தை தொடர்ந்து தமிழில் வெளியான பன்முக நடிகர்கள் நடித்த ’பொன்னியின் செல்வன்’ ஐந்து நாட்களில் 100 கோடி மொத்த வசூலை எட்டிப் பிடித்தது.
“முதல் வார முடிவில் 126 கோடி ரூபாய் மொத்த வசூல் செய்திருக்கும் இந்தப் படம் தீபாவளி பண்டிகைக்கு புதிய படங்கள் வெளிவரும்வரை திரையரங்குகளில் ஓட்டப்படும்” என்கிறார் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணி.
இராமானுஜம்
பொன்னியின் செல்வன்: வசூல் பொங்கி வழியும் பின்னணி!
’பொன்னியின் செல்வன்’ வெற்றியில் உதயநிதி பங்கு என்ன?
this is the last day for your website, thanks, i dont visit again, thanks ramanujam