பெயரை மாற்றிய த்ரிஷா

சினிமா

பொன்னியின் செல்வன் திரைப்படம், இந்த மாதம் 30 ஆம் தேதி தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது .

இயக்குநர் மணிரத்னம் பொன்னியின் செல்வன் புதினத்தை லைகா நிறுவனத்துடன் இணைந்து திரைப்படமாக வெற்றிகரமாக எடுத்து முடித்துள்ளார்.

இந்நிலையில், சில தினங்களுக்கு முன் வெளியான இப்படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது பலகோடி பார்வையாளர்களை கடந்துள்ளது இந்த ட்ரெய்லர்.

ஆதித்ய கரிகாலனாக நடித்துள்ள விக்ரம், வந்திய தேவனாக நடித்துள்ள கார்த்திக், நந்தினி கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஐஸ்வர்யாராய், குந்தவை கதாபாத்திரத்தில் நடித்துள்ள த்ரிஷா ஆகியேரை திரையில் காண ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

இந்நிலையில், குந்தவை கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகை த்ரிஷா ட்விட்டரில் தனது பெயரைக் குந்தவை என மாற்றியுள்ளார். இது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதேபோல் , பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஆதித்ய கரிகாலனாக நடித்துள்ள விக்ரமும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஆதித்த கரிகாலன் என்று பெயரை மாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. இது விக்ரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

மு.வா.ஜெகதீஸ் குமார்

பொன்னியின் செல்வன் திரைப்படம்: எதிர்பார்ப்புகள், சர்ச்சைகள், விவாதங்கள்…

+1
0
+1
0
+1
0
+1
4
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.