பொன்னியின் செல்வன் 2 படத்தின் முதல் பாடல் விரைவில் வெளியாகவுள்ளதாக லைக்கா நிறுவனம் இன்று (மார்ச் 9 ) அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டு பொன்னியின் செல்வன் முதல் பாகம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றியடைந்த நிலையில், இரண்டாவது பாகம் பிரமாண்டமாக உருவாகியுள்ளது.
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது.
படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.பொன்னியின் செல்வன் 2 படத்திற்கான இறுதிக்கட்ட பணிகள் மும்மரமாக நடைபெற்று வரும் நிலையில், படத்தில் மொத்தம் 3 பாடல்கள் உள்ளதாக கூறப்படுகிறது. படம் வரும் ஏப்ரல் 28-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டும் இருக்கும் நிலையில், படத்தின் ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக படத்தின் முதல் பாடல் விரைவில் வெளியாகும் என லைக்கா நிறுவனம் குந்தவையின் வீடியோ ஒன்றை வெளியீட்டு அறிவித்துள்ளது.
மேலும் பொன்னியின் செல்வன் 2 படத்தின் இசை வெளியீட்டு விழா வருகின்ற ஏப்ரல் 4- ஆம் தேதி நேரு மைதானத்தில் வைத்து மிகவும் பிரமாண்டமாக நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
நாடாளுமன்றத்தில் காதல் காட்சி!
சொந்தக் ’காலில்’ நிற்கும் பாஜக: தமிழகம் வரும் நட்டா