பொன்னியின் செல்வன் 2-ம் பாகத்தைப் பார்த்த ரசிகர்கள் அவர்களது விமர்சனங்களை ட்விட்டரில் பகிர்ந்து வருகின்றனர்.
எழுத்தாளர் கல்கியின் வரலாற்று நூலான பொன்னியின் செல்வன் கதையை இரண்டு பாகங்களாக இயக்குநர் மணிரத்னம் இயக்கியிருந்தார்.
இதில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, பிரபு, பார்த்திபன், சரத்குமார் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.
இந்த படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு செப்டம்பர் இறுதியில் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் சிறப்பான வரவேற்பைப் பெற்று சாதனை படைத்தது. முதல் பாகத்தின் வரவேற்பு இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பையும் அதிகரிக்க செய்தது.
இதனையடுத்து பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து ரசிகர்களிடம் படத்தைக் கொண்டு சேர்க்கப் படக்குழுவினர் தீவிரமான ப்ரோமோஷன் வேலையில் ஈடுபட்டனர்.
இதற்காக மும்பை, பெங்களூரு, கொச்சி, ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களுக்கு சென்று ரசிகர்களை சந்தித்தனர்.
இந்நிலையில், பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் இன்று (ஏப்ரல் 28) உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. பல இடங்களில் அதிகாலை காட்சி திரையிடப்பட்ட நிலையில் தமிழகத்தில் மட்டும் முதல் காட்சி காலை 9 மணிக்குத் தான் திரையிடப்பட்டது.
அதிகாலை காட்சி வெளியிடாதது ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்திருந்தாலும், காலை படம் வெளியாவதற்கு முன்பே ரசிகர்கள் கட் அவுட் வைத்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
கட் அவுட்களுக்கு மாலை அணிவித்து பாலாபிஷேகம் செய்து கொண்டாடினர். முதல் நாள் முதல் காட்சியை நடிகர் கார்த்தி காசி திரையரங்கில் ரசிகர்களுடன் சேர்ந்து பார்த்தார். குதிரைகளுக்கு மத்தியில் வெள்ளை நிற காரில், வெள்ளை சட்டை அணிந்து வந்த அவரை ரசிகர்கள் உற்கமாக வரவேற்றனர்.
நடிகர் ஜெயம் ரவி குரோம்பேட்டையில் இருக்கக் கூடிய வெற்றி திரையரங்கில் படத்தைப் பார்த்தார். ஜெயம் ரவிக்கும் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பொன்னியின் செல்வன்-1 படத்தைப் பார்ப்பதற்கு வெள்ளை நிற குதிரையில் கூல் சுரேஷ் வந்திருந்தார். தற்போது 2-ம் பாகத்திற்கு காபி நிற குதிரையில் செண்டை மேளம் முழங்க திரையரங்கிற்கு வந்தார்.
இதனையடுத்து படத்தைப் பார்த்த ரசிகர்கள் பலர் ட்விட்டரில் அவர்களது விமர்சனங்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
மோனிஷா
ஸ்டைலாக வந்த ரஜினி… பாசமுடன் வரவேற்ற பாலய்யா
ஸ்டைலாக வந்த ரஜினி… பாசமுடன் வரவேற்ற பாலய்யா