பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்தின் டிரெய்லர் மார்ச் 29-ஆம் தேதி வெளியாகும் என்று லைகா நிறுவனம் தெரிவித்துள்ளது.
கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நூலானது இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்ட திரைப்படமாக உருவாகி உள்ளது.
கடந்த ஆண்டு பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் வெளியாகி உலகம் முழுவதும் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் சக்கைபோடு போட்டது.
இதனைத்தொடர்ந்து வரும் ஏப்ரல் 28ம் தேதி வெளியாகும் ‘பொன்னியின் செல்வன் 2’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் என 5 மொழிகளில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது.
சமீபத்தில் இத்திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கும் ‘அக நக’ என்ற முதல் சிங்கிள் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.
சிலநாட்களுக்கு முன்பு இயக்குநர் மணிரத்னமும், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும் லண்டனில் உள்ள பிரபல அபே ரோட் ஸ்டுடியோவில் பிஎஸ்-2 படத்தின் இறுதிக்கட்டப் பணிகளுக்காக மும்முரமாக பணிபுரியும் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலானது.
இந்நிலையில் பொன்னியின் செல்வன் 2 படத்தின் டிரெய்லர் மார்ச் 29-ஆம் தேதி வெளியாகும் என்று படத்தை தயாரிக்கும் லைகா நிறுவனம் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
பி.எஸ் 2 படத்தின் டிரெய்லருடன் சேர்ந்து பாடல் வெளியீட்டு விழாவும் மார்ச் 29-ஆம் தேதி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெறும் என்று சினிமா வட்டாரத்தில் தகவல் வெளியாகியுள்ளது.
அதனையடுத்து ஏப்ரல் மாதம் முழுவதும் முதல் பாகத்தைப் போலவே படத்தில் நடித்த நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் இந்தியா முழுவதும் தீவிர ப்ரொமோஷனுக்காக வலம் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கிறிஸ்டோபர் ஜெமா
ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா: ஆளுநருக்கு மீண்டும் அனுப்பிவைப்பு!
மூளையில் ரத்தக்கசிவு:லண்டன் மருத்துவமனையில் பாம்பே ஜெயஸ்ரீ