பக்கா பிளானுடன் களமிறங்கும் பொன்னியின் செல்வன் 2 படக்குழு!
பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தை பிரபலப்படுத்தும் பணியில் அப்படக் குழுவினர் இறங்கியுள்ளனர்.
பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28 ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. கல்கி எழுதிய நாவலை தழுவி எடுக்கப்பட்ட இப்படம் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ளது.
இப்படத்தில் ஆதித்த கரிகாலனாக விக்ரமும், வல்லவராயன் வந்தியத்தேவனாக கார்த்தியும், குந்தவையாக திரிஷாவும், நந்தினி தேவியாக ஐஸ்வர்யா ராய் பச்சனும், அருண்மொழி வர்மனாக ஜெயம் ரவியும் நடித்துள்ளனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் தொடர்பான புரோமோக்கள் வெளியானது. அதனைத்தொடர்ந்து படத்தின் முதல் பாடலான ‘அகநக’பாடலின் லிரிக் வீடியோ கடந்த மார்ச் 20 ஆம் தேதி வெளியிடப்பட்டது.
இந்த நிலையில் வரும் நாட்களில் படத்தின் புரோமோஷனுக்காக படக்குழு செல்லவிருக்கும் நகரங்கள், தேதிகள் உள்ளிட்ட தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
அதன்படி, இன்று (ஏப்ரல் 15) சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தில் இடம்பெறும் ’தீம் பாடலை’ பட குழுவினர் வெளியிடுகின்றனர்.
இதைத்தொடர்ந்து நாளை கோயம்புத்தூர், செல்லும் படக் குழுவினர் அங்கு ரசிகர்களை சந்தித்து உரையாடுகின்றனர்.அதன் பின் ஏப்ரல் 17 ஆம் தேதி சென்னையில் செய்தியாளர்களை சந்திக்கின்றனர்.
அதை முடித்துகொண்டு டெல்லி (ஏப்ரல் 20),கொச்சி(ஏப்ரல் 22), பெங்களூர்(ஏப்ரல் 23), ஹைதராபாத்(ஏப்ரல் 24), மும்பை(ஏப்ரல் 26) ஆகிய இடங்களில் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தை விளம்பரப்படுத்தும் பணியில் படக்குழுவினர் ஈடுபடுகின்றனர்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
ரூ.31.8 கோடிக்கு கேமரூனின் ஒரு பகுதியை வாங்கிய நித்தியானந்தா?
ஆணவ படுகொலை: பெற்ற தாயையும், மகனையும் கொடூரமாக கொன்ற தந்தை!