அமெரிக்காவில் சாதனை படைத்த ’பொன்னியின் செல்வன்’!

சினிமா

அமெரிக்காவின் கேளிக்கை நகரமான லாஸ்வேகாஸில் திரையிடப்பட்ட முதல் தமிழ் திரைப்பட டிரெய்லர் என்ற பெருமையை பொன்னியின் செல்வன் பெற்றுள்ளது.

அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் என்ற நாவலை அதே பெயரில் முன்னணி இயக்குநர் மணிரத்னம் 2 பாக திரைப்படமாக உருவாக்கியுள்ளார்.

சுமார் 500 கோடி பட்ஜெட்டில் தயாராகியுள்ள இப்படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைக்கா நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளன.

இத்திரைப்படத்தில், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் பச்சன், ஜெயராம் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட நட்சத்திரங்கள் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

வரும் 30ம் தேதி பொன்னியின் செல்வன் முதல் பாகம் வெளியாக உள்ளது.

இதனை முன்னிட்டு கடந்த ஒரு மாத காலமாக படக்குழுவினர் நாட்டின் பல்வேறு மாநிலத்திற்கும் சென்று புரோமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகி உள்ளது.

அமெரிக்காவில் பொன்னியின் செல்வன்

இந்நிலையில் அமெரிக்காவின் கேளிக்கை நகரமான லாஸ் வேகாஸில் தங்களது வேற லெவல் புரொமோசனை செய்துள்ளனர் பொன்னியின் செல்வன் படக்குழுவினர்.

அதன்படி லாஸ் வேகாஸ் நகரத்தில் உள்ள முக்கிய பகுதியில் முதன்முறையாக திரையிடப்பட்டது.

ponniyin selvan 1 trailer screened in las vegas

இதுகுறித்து திரைப்படத்தை தயாரித்துள்ள லைகா நிறுவனம் வெளியிட்ட பதிவில்,

”அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் திரையிடப்படும் முதல் தமிழ் டிரெய்லர் என்ற பெருமையை பொன்னியின் செல்வன் பெற்றுள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அதன் வீடியோ காட்சியையும் வெளியிட்டுள்ளது.

முன்பதிவு தொடங்கியது!

பான் இந்தியா திரைப்படமாக தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என 5 மொழிகளில் பொன்னியின் செல்வன் வெளியாகவுள்ளது.

அதேவேளையில் உலக அளவிலும் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்தியாவில் படத்திற்கான டிக்கெட் முன்பதிவு நேற்று முதல் தொடங்கிய நிலையில், கனடா போன்ற வெளிநாடுகளில் முன்பதிவுக்கான வேலைகள் பரபரப்பாக நடந்துவந்தது.

சமீப காலமாக இந்திய திரையுலகினர் துபாயின் புர்ஜ் கலிஃபாவை பட புரொமோசனுக்கான மையமாக பயன்படுத்தி வந்தனர்.

இந்நிலையில் தற்போது பொன்னியின் செல்வன் மூலம் லாஸ் வேகாஸும் கவனம் பெற்றுள்ளது.

கிறிஸ்டோபர் ஜெமா

பொன்னியின் செல்வன்’ டிக்கெட் முன்பதிவு: ரெடியில் ரசிகர்கள்!

கிச்சன் கீர்த்தனா – சண்டே ஸ்பெஷல்: வீட்டிலேயே பலகாரம் தயாரிக்கப் போறீங்களா? இதோ உங்களுக்கான டிப்ஸ்!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *