தியேட்டர்கள் ஹவுஸ்ஃபுல் : முதல் நாள் வசூலில் சாதனை படைக்குமா பொன்னியின் செல்வன்?

சினிமா

இன்று (செப்டம்பர் 30) வெளியாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் முதல் நாளில் 50 கோடிக்கு மேல் வசூல் செய்யும் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

எழுத்தாளர் அமரர் கல்கியால் படைக்கப்பட்டு இன்று வரை கொண்டாடப்பட்டு வரும் காவியம் தான் பொன்னியின் செல்வன் நாவல்.

இதனை அதே பெயரில் இரண்டு பாகங்களாக இயக்குநர் மணிரத்னம் உருவாக்கியுள்ளார். ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.

இத்திரைப்படத்தில் ஆதித்ய கரிகாலனாக விக்ரமும், வந்திய தேவனாக கார்த்தியும், ராஜராஜ சோழனாக ஜெயம் ரவியும் நடித்துள்ளனர்.

அதில் நந்தினியாக ஐஸ்வர்யா ராயும், குந்தவையாக த்ரிஷாவும் தங்களது அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளில், லைகா மற்றும் மெட்ராஸ் புரொடக்சன் தயாரிப்பில்,

சுமார் 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் உலகம் முழுவதும் இன்று வெளியாகியுள்ளது.

தியேட்டர்கள் ஹவுஸ்புல்

இந்நிலையில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் தமிழகத்தில் முதல் நாளிலேயே 20 கோடி ரூபாயும்,

உலக அளவில் ஏறத்தாழ ரூ.50 கோடிக்கும் மேல் வசூல் செய்யும் என்றும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் இன்று படம் பார்ப்பதற்கு மட்டும் ஏறத்தாழ 7 லட்சம் டிக்கெட்டுகள் முன் பதிவாகியுள்ளன.

தமிழகம் முழுவதும் பெருவாரியான திரையரங்குகள் முதல்நாள் மட்டுமின்றி அடுத்த 5 நாட்களுக்கும் ஹவுல்ஃபுல் காட்சிகளாக முன்பதிவு ஆகியுள்ளன.

இதனால் எதிர்பார்த்த ரூ.50 கோடியை வசூல் செய்து, தமிழ் திரையுலகில் முதல்நாளில் அதிக வசூல் செய்த தமிழ் படம் என்ற சாதனையை பொன்னியின் செல்வன் 1 திரைப்படம் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன்மூலம் முதல்நாளில் அதிக வசூல் செய்த தமிழ் திரைப்படங்களின் சாதனையை பொன்னியின் செல்வன் முறியடிக்கும் என்று கூறப்படுகிறது.

கிறிஸ்டோபர் ஜெமா

சிறப்புக் கட்டுரை: பொன்னியின் செல்வன்- கல்வெட்டுகளும் கல்கியின் கற்பனையும்!

வணிகவரி சோதனை பழிவாங்கும் நோக்கத்துடன் நடத்தப்படுகிறதா? அமைச்சர் மூர்த்தி பதில்!

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.