பொங்கலுக்கு புதுப்படங்கள் வெளியாவது போல், தொலைக்காட்சிகளிலும் பல்வேறு சூப்பர்ஹிட் படங்கள் ஒளிபரப்பப்படுவது வழக்கம்.
அந்த வகையில் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு தொலைக்காட்சிகளில் என்னென்ன புதுப்படங்கள் ஒளிபரப்பப்பட உள்ளன என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
சன் டிவி
சன் டிவியில் வருகிற ஜனவரி 15 ஆம் தேதி பொங்கல் பண்டிகையன்று காலை 11 மணிக்கு சிவகார்த்திகேயனின் ’நம்ம வீட்டு பிள்ளை’ படமும்,
மதியம் 2 மணிக்கு சூர்யா நடித்துள்ள ’எதற்கும் துணிந்தவன்’ படமும்,
மாலை 6.30 மணிக்கு தனுஷின் ’திருச்சிற்றம்பலம்’ திரைப்படமும் ஒளிபரப்பப்பட உள்ளது.
ஜனவரி 16 ஆம் தேதி மாட்டுப்பொங்கல் தினத்தன்று காலை 11 மணிக்கு ரஜினியின் ’பேட்ட’ திரைப்படமும்,
மதியம் 2 மணிக்கு விஜய் நடித்துள்ள ’தெறி’ படமும், மாலை 6.30 மணிக்கு விஷாலின் ’லத்தி’ படமும் ஒளிபரப்பப்பட உள்ளது.
விஜய் டிவி
விஜய் டிவியில் பொங்கல் ஸ்பெஷலாக வருகிற ஜனவரி 15 ஆம் தேதி காலை 10.30 மணிக்கு விஜய் சேதுபதி நடித்துள்ள ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ படமும்,
மதியம் 2 மணிக்கு ரிஷப் ஷெட்டியின் ’காந்தாரா’ படமும், மாலை 5.30 மணிக்கு ராஜமவுலி இயக்கிய ’ஆர்.ஆர்.ஆர்’ படமும் ஒளிபரப்பப்பட உள்ளது.
அதேபோல் மாட்டுப் பொங்கல் தினமான ஜனவரி 16 ஆம் தேதி காலை 10 மணிக்கு அருண்விஜய் நடித்த ’ஓ மை டாக்’ படமும்,
மதியம் 12.30 மணிக்கு கார்த்தியின் ’விருமன்’ படமும், மாலை 4 மணிக்கு கமலின் ’விக்ரம்’ படமும் ஒளிபரப்பரப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஜீ தமிழ்
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வருகிற ஜனவரி 15 ஆம் தேதி பிற்பகல் 12.30 மணிக்கு சுந்தர் சி இயக்கிய ’காஃபி வித் காதல்’ திரைப்படமும்,
மதியம் 3.30 மணிக்கு அருண் விஜய்யின் ’யானை’ திரைப்படமும் ஒளிபரப்பப்பட உள்ளது.
அதேபோல் மாட்டுப்பொங்கல் தினத்தன்று மதியம் 1 மணிக்கு பிரபுதேவா நடித்துள்ள ’மை டியர் பூதம்’ திரைப்படமும்,
மாலை 3.30 மணிக்கு சசிகுமாரின் ’காரி’ படமும் ஒளிபரப்பப்பட உள்ளது.
கலைஞர் டிவி
பொங்கல் தினமான ஜனவரி 15 ஆம் தேதி கலைஞர் தொலைக்காட்சியில் காலை 10 மணிக்கு சிவகார்த்திகேயனின் ’டான்’ திரைப்படமும்,
மதியம் 1.30 மணிக்கு பிரதீப் ரங்கநாதன் இயக்கிய ’லவ் டுடே’ படமும் ஒளிபரப்பப்பட உள்ளது.
அதேபோல் ஜனவரி 16 ஆம் தேதி மாட்டுப்பொங்கல் தினத்தன்று மதியம் 1.30 மணிக்கு சிம்பு – கவுதம் மேனன் கூட்டணியில் வெளியான ’வெந்து தணிந்தது காடு’ திரைப்படம் ஒளிபரப்பப்பட உள்ளது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
பொங்கல்: தாம்பரம் – நெல்லைக்கு மற்றொரு சிறப்பு ரயில் – இன்று முன்பதிவு தொடக்கம்.
பொம்மைகள் பறிமுதல்: ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களுக்கு நோட்டீஸ் !
’’ராகுல் கிட்ட இருக்குற பிரச்சனையே இது தான்’’ – அசாருதீன்