pizza 4 movie release date

முனி, அரண்மனை வரிசையில் பீட்சா 4

சினிமா

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான பீட்சா படம் மிகப்பெரிய அளவில் வெற்றி படமாக அமைந்தது. இந்த படத்தை சி.வி. குமார் தயாரித்திருந்தார்.

இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து 2013 ஆம் ஆண்டு அசோக் செல்வன் நடிப்பில் பீட்சா 2 வில்லா படம் வெளியானது. அதன்பிறகு பீட்சா 3 தி மம்மி படம் வெளியானது. இந்த இரண்டு படங்களையும் சி.வி. குமார் தான் தயாரித்திருந்தார். பீட்சா 2 & 3 படங்களுக்கும் பீட்சா 1 படத்திற்கும் எந்த தொடர்பும் இல்லாமல் வெளியானதால் ரசிகர்களின் கவனத்தை பீட்சா 2 & 3 படங்கள் ஈர்க்கவில்லை.

இந்நிலையில், தற்போது பீட்சா 4 படம் தயாராகிறது. இந்த பாகத்திற்கு பீட்சா 4 Home Alone என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை ஆண்ட்ரூஸ் இயக்குகிறார். அபி ஹாசன் இப்படத்தில் ஹீரோவாக நடிக்க உள்ளார். பீட்சா 4 படத்தையும்  சி.வி. குமார் தான் தயாரிக்கிறார். கூடிய விரைவில் இந்த படம் குறித்த மற்ற தகவல்கள் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

– கார்த்திக் ராஜா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

அரசியலிலும் அவர் கேப்டன்: அரசு விழாவில் விஜயகாந்தை புகழ்ந்த மோடி

”கல்வி என்பது அறிவோடு சகோதரத்துவத்தையும் வளர்க்க வேண்டும்”: மோடி

+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *