இயக்குநர் மிஷ்கின் எழுதி, இயக்கி வரும் ‘பிசாசு-2’ படத்தில் நடிகை ஆண்ட்ரியா நிர்வாணக் காட்சிகளில் நடித்திருப்பதாக செய்திகள் வெளியானது.
அப்படத்தின் முதல் பார்வை போஸ்டரும் ஆண்ட்ரியா நிர்வாணமாக இருக்கும் தோற்றத்துடன் வெளியானது அதன் பின்னர் பிசாசு – 2 படத்தின் வியாபாரம் சூடுபிடித்தது.
இந்த ஆண்டின் எதிர்பார்ப்புக்குரிய படங்களில் பிசாசு – 2 இடம்பிடித்தது. ஆகஸ்ட் 31 அன்று வெளியாகும் என இம்மாத தொடக்கத்தில் அறிவிக்கப்பட்டது.
விக்ரம் நடித்துள்ள கோப்ரா படத்தை தமிழகத்தில் 800 திரைகள் வரை ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிட திட்டமிட்டிருப்பதால் பிசாசு – 2 படத்தின் வெளியீடு ஒத்திவைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் படத்தில் ஆண்ட்ரியா நடித்துள்ள நிர்வாணக் காட்சிகளையெல்லாம் படத்தில் இருந்து நீக்கிவிட்டதாக இயக்குநர் மிஷ்கின் கடந்த வாரம் அறிவித்தார்.
பிசாசு படத்தில் ஆண்ட்ரியாவின் நிர்வாணக்காட்சிகளால் படம் கல்லா கட்டும் என எதிர்பார்ப்புடன் காத்திருந்த திரையரங்க உரிமையாளர்களும், ஆண்ட்ரியா ரசிகர்களும் அதிர்ச்சியடைந்தனர்.
இதனால், “அப்போ நீங்க மட்டும் பார்க்குறதுக்குத்தான் ஆண்ட்ரியாவுக்கு கூடுதல் சம்பளம் வாங்கிக் கொடுத்து நிர்வாணக்காட்சிகளை எடுத்தீர்களா?” என்று இயக்குநர் மிஷ்கினை நோக்கி சமூக வலைத்தளங்களில் கேள்விகள் எழுப்பப்பட்டது.
இந்த நிலையில் இது குறித்து வார இதழ் ஒன்றுக்கு இயக்குநர் மிஷ்கின் அளித்த பேட்டியில், “இந்த பிசாசு-2 படத்தின் கதையை சொல்லி முடிச்சவுடனேயே இதுல நிர்வாணக் காட்சியிருக்கான்னு ஆண்ட்ரியா கேட்டாங்க.
ஆமாம் இருக்குன்னு சொன்னேன். அப்படீன்னா வழக்கமான சம்பளத்தைவிட எனக்கு அதிகமான சம்பளம் வேணும்ன்னு கேட்டாங்க.
அதெல்லாம் நியாயமானதுதான்னு நாங்களும் ஒத்துக்கிட்டோம்.
அதுக்கப்புறம் எங்க ரெண்டு பேருக்கும் பொதுவான போட்டோகிராபர் பிரெண்டான சுந்தரை வைச்சு ஆண்ட்ரியாவோட நியூட் போட்டோ ஷூட்டை செஞ்சோம்.
ஆண்ட்ரியா வீட்லேயே அந்த போட்டோ ஷூட் நடந்துச்சு. அந்த நேரத்தில், அந்த இடத்தில் அவரும், என்னுடைய பெண் உதவி இயக்குநர் ஈஸ்வரி மட்டுமே உடன் இருந்தாங்க.
நான் அங்கு இல்லை. அதுக்கப்புறம் எனக்கு அதையெல்லாம் அனுப்பட்டுமான்னு அவர் கேட்டப்போ.. நான், இப்போ வேண்டாம்.. வெயிட் பண்ணுன்னு சொல்லிட்டு,
ஒரு பக்கம் யோசிச்சுக்கிட்டே இன்னொரு பக்கம் மற்ற வேலைகளைப் பார்த்துக்கிட்டிருந்தேன்.
அப்புறம் ஒரு நாள் நான் ஆண்ட்ரியாவைக் கூப்பிட்டு நிர்வாணக் காட்சிகளை படத்துல வைக்கப் போறதில்லை.
ஏன்னா இது ஒரு பெண்ணைப் பற்றிய படம். பெண்கள் பார்க்க வேண்டிய படம் இது. படத்துக்கு இந்த நிர்வாணக் காட்சிகளால் ஏ சான்றிதழ் கொடுத்துட்டாங்கன்னா குழந்தைங்க வந்து பார்க்க முடியாமல் போயிரும்ன்னு சொன்னேன்.
அப்புறம் போட்டோகிராபர் சுந்தருக்கு போன் செஞ்சு அந்த போட்டோக்களை டெலீட் செஞ்சிருங்கன்னு சொல்லிட்டேன். இதுதான் நடந்தது.
நிர்வாணக் காட்சிகள் என்பது இந்தப் படத்தைப் பொறுத்தவரை பேச்சு அளவிலேயே காணாமல் போய்விட்டது” என்று சொல்லியிருக்கிறார் இயக்குநர் மிஷ்கின்.
ஆனால்… இயக்குநர் மிஷ்கின் இல்லாமல் ஆண்ட்ரியா நிர்வாணக்காட்சிகள் எப்படி படமாக்கப்பட்டிருக்கும் என்கிற கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.
இந்தப் படத்தில் கெளரவ வேடத்தில் நடித்திருக்கும் விஜய்சேதுபதி சம்பந்தபட்ட புகைப்படங்கள் ஊடகங்களுக்கு இதுவரை வழங்கப்படவில்லை,
படம் சம்பந்தமான அனைத்து புரமோஷன்களிலும் ஆண்ட்ரியா மட்டுமே முன்னிலைப்படுத்தப்பட்டு வருகிறார்.
புதிய படங்களை வெகுஜன தளத்தில் விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சிகளுக்காக தமிழ் சினிமா நடிகர்கள் ஊர் ஊராக பயணம் செய்ய தொடங்கியுள்ளனர் பிசாசு – 2 படத்தை விளம்பரப்படுத்த ஆண்ட்ரியா, விஜய்சேதுபதி இருவரும் வர வேண்டும்.
அது சாத்தியமில்லை என்பதால் படம் வெளியாகும் வரை படம் பற்றிய செய்திகள் ஊடகங்களில் வெளிவர வேண்டும் என்பதற்காக முன்னுக்கு பின் முரணாக பேசி வருகிறார் என்கின்றனர் கோடம்பாக்க சினிமா வட்டாரத்தினர்.
இராமானுஜம்
ஆண்ட்ரியா நிர்வாணக் காட்சிகள் நீக்கம்: மிஷ்கின்