பிசாசு 2 திரைப்படத்தில் நடித்துள்ள, நடிகை ஆண்ட்ரியாவின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் ஏராளமான ரசிகர்களைக் கொண்டவர் இயக்குனர் மிஷ்கின். அவரது படத்திற்கென தனி ரசிகர் பட்டாளம் உண்டு. மிஷ்கின் இயக்கிய பிசாசு 2 திரைப்படம் ஆகஸ்ட் 31ஆம் தேதி வெளியாகிறது.
இந்தப் படத்தில் நடிகை ஆண்ட்ரியா, விஜய் சேதுபதி, பூர்ணா ஆகியோர் முதன்மை கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். கார்த்திக் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ராக்போர்ட் எண்டெர்டையின்மெண்ட் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.
பிசாசு 1 திரைப்படம் 2014-ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்றது.
பிசாசு 2 திரைப்படத்தில் நடிகை ஆண்ட்ரியா நடித்த 15 நிமிட நிர்வாண காட்சிகள் படத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
படத்தின் டீசர் கடந்த ஏப்ரல் மாதம் 29ஆம் தேதி வெளியானது. ஆண்ட்ரியா பேய் கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டியிருந்தார். டீசர் வெளியான பின்னர், படத்தின் மீதான ஆவல் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்திருந்தது.
இந்தநிலையில், சுதந்திர தினத்தை முன்னிட்டு பிசாசு 2 படத்தில் ஆண்ட்ரியாவின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது.
இதில் நடிகை ஆண்ட்ரியா தனது கையில் துப்பாக்கி வைத்திருக்கிறார். இந்த போஸ்டரை ராக்போர்ட் எண்டெர்டையின்மெண்ட் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட நான்கு மொழிகளில் இத்திரைப்படம் வெளியாக உள்ளது.
செல்வம்
நடிகர் சங்க கட்டுமான செலவு: ரூ. 25 லட்சம் வழங்கிய விருமன் படக்குழு!