பிச்சைக்காரன் 2 : ஸ்னீக் பீக் ட்ரெய்லர் வெளியீடு!
முதல் நான்கு நிமிட காட்சிகளுடன் ஸ்னீக் பீக் ட்ரெய்லராக பிச்சைக்காரன் 2 திரைப்படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகியுள்ளது.
2016 ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களின் ஆதரவை பெற்ற படம் பிச்சைக்காரன். இந்த படத்தில் நாயகனாக விஜய் ஆண்டனி நடிந்திருந்தார். இந்நிலையில் அதன் இரண்டாம் பாகம் உருவாகி இருக்கிறது.
பிச்சைக்காரன் திரைப்படத்தை இயக்குநர் சசி இயக்கியிருந்த நிலையில், பிச்சைக்காரன் 2 திரைப்படத்தை விஜய் ஆண்டனி இயக்கி நடித்துள்ளார்.
சமீபத்தில் இப்படத்தின் ஷூட்டிங் மலேசியாவில் நடைபெற்ற போது எதிர்பாராத விதமாக விஜய் ஆண்டனி விபத்தில் சிக்கினார். அதற்கான சிகிச்சையில் இருக்கும் அவர் இப்போது நலம் பெற்று ஓய்வெடுத்து வருகிறார்.
இந்தப் படத்தின் முதல் நான்கு நிமிட காட்சிகள் ஸ்னீக் பீக் ட்ரெய்லராக வெளிவரும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று(பிப்ரவரி 10 ) அந்த நான்கு நிமிட காட்சிகள் தற்போது வெளியாகி இருக்கிறது.
இதன் ஆரம்பத்திலேயே வில்லனின் அறிமுகம் தான் காட்டப்படுகிறது அதில் பாம்புக்கு வில்லன் எலியை உணவாக போடுவதுடன் இந்த காட்சி விரிகிறது. அதைத்தொடர்ந்து ஒருவரின் மூளையை மற்றொருவருக்கு மாற்றும் அறுவை சிகிச்சையை பற்றிய ஒரு விவாதம் காட்டப்படுகிறது. அதில் நல்லவர்களின் மூளை நன்மையை கொடுக்கும்.
ஆனால் ஹிட்லர் மாதிரியான மூளையை வேறொருவருக்கு பொருத்தினால் என்ன ஆகும் என்ற கேள்வியோடு இந்த ட்ரெய்லர் முடிவடைகிறது.
இந்த படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
”சாதனை மேல் சாதனை” அசத்திய ரொனால்டோ: உச்சிமுகர்ந்த அல் நாசர் அணி!
சமந்தாவின் ‘சாகுந்தலம்’: ரிலீஸ் தேதியை அறிவித்த தயாரிப்பு நிறுவனம்!