தென்னிந்திய சினிமாவில் கொண்டாடப்பட்ட நடிகை கீர்த்தி சுரேஷ் முதல்முறையாக பாலிவுட்டில் கால்பதித்துள்ளார்.
கிறிஸ்துமஸ் தினத்தில் கீர்த்தி, வருண் தவானுடன் இணைந்து நடித்த பேபி ஜான் படம் ரிலீஸ் ஆகி இருந்தது. இப்படம் ரூ.160 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டது. அட்லீயும் இந்த படத்தின் தயாரிப்பாளர் ஆவார்.
படம் வெளியாகி 3 நாட்களில் ரூ.20 கோடி மட்டுமே வசூலித்துள்ளது. தமிழில் ஹிட் ஆன தெறி படத்தின் ஹிந்தி ரீமேக் தான் அந்த படம். கீர்த்தி சுரேஷின் முதல் இந்தி படம் பெரியளவு போகாததால் வருத்தமடைந்துள்ளார்.
எனினும், பெரிய பட்ஜெட் படங்கள் இப்போதைக்கு ரிலீஸ் ஆகாததால், பேபி ஜான் மெல்ல மெல்ல நல்ல வசூலை குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே வேளையில் , புஷ்பா படம் இன்னும் நல்ல வசூலை குவித்து கொண்டிருக்கிறது.
இந்த நிலையில், மும்பையில் நடிகை கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் வெளியில் வந்தபோது அவரை போட்டோவுக்கு போஸ் கொடுக்கும்படி அழைத்துள்ளனர். ‘க்ரித்தி’ என சொல்லி அவர்கள் அழைக்க, ‘க்ரித்தி இல்லை கீர்த்தி’ என்று கூறும்படி அவர்களை திருத்தினார்.
அதன் பிறகு சில போட்டோகிராபர்கள் அவரை தோசா என்று கூப்பிட்டுள்ளனர். அதை கேட்டு கீர்த்தி ஷாக் ஆகி “நான் கீர்த்தி தோசா இல்லை கீர்த்தி சுரேஷ். ஆமாம் எனக்கு தோசை ரொம்ப பிடிக்கும்” என கூறி அவர்களுக்கு பதிலடி கொடுததார். பொதுவாக மும்பையில் தென்னிந்திய நடிகர்களை தோசா என்று அழைப்பது வழக்கமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உண்மையிலேயே தென்னிந்திய உணவுகளில் கீர்த்திக்கு தோசை மிகவும் பிடித்தது என்று அவரே ஒரு பேட்டியில் கூறியுள்ளார் என்பதும் கூடுதல் தகவல்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
“யார் அந்த சார்?” : எடப்பாடிக்கு கோவி செழியன் பதில்!
அண்ணா யுனிவர்சிட்டி மாணவி விவகாரம்… ஆளுநரை சந்திக்கும் விஜய்