விஜய்சேதுபதி மகனின் ‘பீனிக்ஸ்’ : ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு!

Published On:

| By Sharma S

ஸ்டண்ட் மாஸ்டர் அனல் அரசு இயக்கத்தில் நடிகர் விஜய்சேதுபதியின் மகன் சூர்யா நடிக்கும் ‘பீனிக்ஸ்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா நாயகனாக அறிமுகமாகும் இந்தத் திரைப்படம் நாளை(நவ.14) வெளியாக வேண்டிய நிலையில், சென்சார் உட்பட சில தவிர்க்க முடியாத காரணங்களால் ரிலீஸ் தேதியை ஒத்திவைப்பதாக அப்படக்குழு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அப்படக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படமான ‘பீனிக்ஸ்(வீழான்)’ முன்னதாக வருகிற நவம்பர் 14ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டிருந்த நிலையில், எதிர்பாராத சூழ்நிலைகள் காரணமாக ஒத்திவைக்கப்படுகிறது என்பதை வருத்தத்துடன் தங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

ஒரு குழுவாக நாங்கள் இன்னும் அதிக உற்சாகத்துடனும், எதிர்பார்ப்புடனும் சிறந்த சினிமா அனுபவத்தை வழங்க அயராது உழைத்து வருகிறோம். மாற்றியமைக்கப்பட்ட வெளியீட்டுத் தேதி விரைவில் அறிவிக்கப்படும். தங்களது தொடர்ச்சியான ஆதரவு, புரிதல் மற்றும் தங்களது பொறுமைக்கு நாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

’பீனிக்ஸ்’ திரைப்படம் முன் எப்போதையும் விட வலுவாக உருவாகி வெளியாகும் என்று நாங்கள் உறுதியளிக்கிறோம். அது வெளியாகும் போது ஒரு ஆரவாரமாக இருக்கும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், சென்சார் போர்டு சில கட்டிப்பாடுகள் கொடுத்துள்ளதால் தான் வெளியீட்டில் இந்தத் தாமதம் என்றும், விஜய்யின் தெவெக கட்சிக் கொடி படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளதால் சென்சார் போர்டு ஆட்சேபனை தெரிவித்துள்ளது என்றும் தகவல் வெளியாகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

– ஷா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….

கஸ்தூரி முன்ஜாமீன் மனு: தீர்ப்பை ஒத்திவைத்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்

ரிச் அண்ட் மிடில்கிளாஸ் லுக்! விருப்பமில்லாமல் நடிக்க வந்து வெற்றி பெற்ற ஜெயபிரகாஷ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share