சரியான கதைகள் கிடைக்கவில்லை: குக் வித் கோமாளி புகழ்

சினிமா

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியான குக் வித் கோமாளி மூலம் பிரபலமான புகழ் வெள்ளித்திரையில் தனது நகைச்சுவையை வெளிப்படுத்த சரியான கதைகள் கிடைக்கவில்லை என்று கூறியுள்ளார்.

இவர், சமீபத்தில் தன்னுடைய நீண்ட கால தோழியும் காதலியுமான பென்சி ரியா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகு தற்போது இவர் மீண்டும் திரைப்படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார்.

இது குறித்து ஆங்கில பத்திரிகைக்கு புகழ் பேசுகையில், “நான் முழுக்க முழுக்க நகைச்சுவை வேடங்களில் நடிக்க வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள்.

சிலர் நான் எதிர்மறையான கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்று கூறுகின்றனர். அவை அனைத்தையும் நான் என் கருத்தில் எடுத்துக்கொள்கிறேன்.

Perfect Stories Not Found: Cook with Clown Fame

எனது நகைச்சுவைய வெளிப்படுத்த இன்னும் சரியான கதைகள் கிடைக்கவில்லை.

இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளிவந்த எதற்கும் துணிந்தவன் மற்றும் அஜித் நடிப்பில் வெளிவந்த வலிமை ஆகிய படங்களில் நான் நகைச்சுவை வேடங்களில் நடித்துள்ளேன். தற்போது பொன்ராம் இயக்கும் ஒரு படத்தில் நடித்து முடித்துள்ளேன்.

Perfect Stories Not Found: Cook with Clown Fame


ஒரு சில படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வருகிறேன். மக்கள் என்னிடமிருந்து அதிக நகைச்சுவையை எதிர்பார்க்கிறார்கள், அவர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய நான் பாடுபடுவேன்” என்று கூறினார்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

‘குக் வித் கோமாளி’- இரண்டு வைல்ட் கார்டு எண்ட்ரி; யார் தெரியுமா?

மோடி பிறந்தநாள் -வேலையின்மை தினமாக கொண்டாட்டம்: காங்கிரஸ்

+1
0
+1
2
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.