உயிர்த்துளி: கதை இருக்கு நாயகி இல்லை!

சினிமா

‘காமராசு’, ‘அய்யா வழி’, ‘நதிகள் நனைவதில்லை’ ஆகிய படங்களுக்குப் பிறகு, இயக்குநர் நாஞ்சில் பி.சி.அன்பழகன் தயாரித்து, இயக்கும் படம் ‘உயிர்த் துளி.

இந்தப் படத்தில் நடிகர் சிங்கமுத்துவின் மகன் கார்த்திக், எஸ்.ஏ.சந்திரசேகர், வாகை சந்திரசேகர், சரவணன், கஸ்தூரி, கோமல் ஷர்மா, சீதா, ரோஷன், காவியா, நித்யமது, கலை, கவிதா ஸ்ரீ, பிரியதர்ஷினி, எலிசபெத், சிங்கமுத்து, மதன்பாப், ரவிமரியா, ரோபோ சங்கர், மதுரை முத்து, பவர்ஸ்டார், அருள்மணி, போண்டா மணி, ரெங்கநாதன், வையாபுரி, ஜெயமணி, தாம்ஸன் மற்றும் பலர் நடிக்கின்றனர்.

இந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்கியதோடு படத்தையும் தயாரிக்கிறார் இயக்குநர் நாஞ்சில் பி.சி.அன்பழகன்.

கதாநாயகி இல்லாமல், நாயகனை மட்டுமே கொண்ட உயிரோட்ட சம்பவங்களின் தொகுப்பே இந்த ‘உயிர்த்துளி’ திரைப்படம். கொடைக்கானலில் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு தான் படத்தின் கதைக் கரு அமைக்கப்பட்டுள்ளது.

கொடைக்கானலிலேயே ஒரே கட்டமாக உயிர்த்துளி படத்தின் படப்பிடிப்பு நடக்கவுள்ளது.

ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சியை பாராட்டிய அஷ்வின்

சிரிக்காமல் போட்டோ எடுத்து கொண்ட செல்ஃபிபுள்ள சமந்தா

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.