பாங்காக் புக்கட் தீவிற்கு சுற்றுலா சென்றுள்ள நடிகர் சிலம்பரசனை அங்குள்ள ஒலிப்பதிவுக்கூடத்தில் வைத்து டப்பிங் பேசவைக்க படக்குழு முடிவு செய்துள்ளது.
சிலம்பரசன் கவுதம் கார்த்திக் ஆகியோர் இணைந்து நடிக்கும் படம் பத்துதல. இதில் சிலம்பரசன் நிழலுலக தாதாவாகவும் கவுதம் கார்த்திக் காவல்துறை அதிகாரியாகவும் நடித்திருக்கிறார்கள்.
கன்னடத்தில் வெற்றி பெற்ற ‘முஃப்தி’ படம் பத்துதல என்கிற பெயரில் தமிழில் மொழிமாற்றம் செய்து எடுக்கப்பட்டு உள்ளது
கன்னட மொழி படத்தை இயக்கிய நார்தனே தொடக்கத்தில் தமிழிலும் இயக்கி வந்தார். அதன்பின், இயக்குநர் நார்தன் விலகிக் கொள்ள சில்லுனு ஒரு காதல் படத்தை இயக்கிய கிருஷ்ணா படத்தை இயக்கியுள்ளார்
ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு 2019 ஆம் ஆண்டு ஜூன் 15 இல் தொடங்கியது. இப்படம் மார்ச் 30 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
மாநாடு படத்திற்கு பின் சிலம்பரசன் படப்பிடிப்புக்கு சரியாக வருகிறார். தயாரிப்பாளர்களுக்கு எந்த வகையிலும் பண இழப்பு, தேவையற்ற செலவுகளை ஏற்படுத்துவதில்லை என்று சினிமா வட்டாரத்தில் கூறி வந்தனர்.
பத்துதல படத்தின் படப்பிடிப்பு தொடங்க திட்டமிட்டு ஏற்பாடுகள் செய்து வந்த நிலையில் சிலம்பரசன் தந்தை டி.ஆர் உடல் நலம் பாதிக்கப்பட்டது. அப்போதும்கூட தயாரிப்பாளரிடம் தகவல் கூறிவிட்டு அவரது அனுமதி பெற்று அப்பாவின் சிகிச்சைக்காக வெளிநாடு சென்றார் என கூறப்பட்டது.
பத்துதல படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரடக்க்ஷன் வேலைகள் முடிந்தாலும் சிலம்பரசன் டப்பிங் பேசி முடிக்கவில்லை.
சிலம்பரசன் தற்போது வெளிநாட்டில் இருப்பதால் பத்துதல படத்திற்கு அவர் பேசவேண்டிய டப்பிங் பணிகள் தொடங்கப்படவில்லை
ஒய்வெடுப்பதற்காக பாங்காக் புக்கட் தீவுக்கு சென்ற சிலம்பரசன் இப்போதைக்கு சென்னை வருவதாக இல்லை என்பதை அறிந்த படக்குழு, பாங்காக்கின் புக்கட் தீவுக்கே சென்றுள்ளது. அங்குள்ள ஓர் ஒலிப்பதிவுக்கூடத்தில் சிலம்பரசனை டப்பிங் பேசவைக்க முடிவு செய்துள்ளனர். இதற்கு சிலம்பரசனும் ஒப்புக்கொண்டுள்ளார்.
இராமானுஜம்
’’ஓம் வெள்ளிமலை’’ – ஒரு உலக சினிமா!
“மணிஷ் சிசோடியா கைது கேவலமான அரசியல்”: அரவிந்த் கெஜ்ரிவால்