தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிம்பு தற்போது நடித்து முடித்துள்ள திரைப்படம் ‘பத்து தல’.
இந்த படத்தின் இசைவெளியீட்டு விழா இன்று (மார்ச் 18 ) மாலை துவங்கிய நிலையில், இது குறித்த வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
நடிகர் சிம்பு, ‘வெந்து தணிந்தது காடு’ படத்தைத் தொடர்ந்து, மீண்டும் ஏ ஜி ஆர் என்கிற கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் ‘பத்து தல’.
இயக்குனர் ஒபலி என். கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம், கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் நடிப்பில் வெளியாகி பிளாக் பஸ்டர் ஹிட் அடித்த ‘முஃட் படத்தின் ரீமேக்காக எடுக்கப்பட்டுள்ளது.
இப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்த நிலையில், மார்ச் 30ஆம் தேதி இப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்நிலையில் , இன்று இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேரு உள்விளையாட்டு அரங்கில் மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது.
இதில் ‘பத்து தல’ படத்தில் நடித்துள்ள நடிகர் சிம்பு, கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர். தற்போது இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக துவங்கி உள்ள நிலையில், நேரு ஸ்டேடியம் முழுவதும் சிம்புவின் ரசிகர்கள் வெள்ளத்தால் சூழ்ந்துள்ளது.
இது குறித்த வீடியோ தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மு.வா.ஜெகதீஸ் குமார்