இந்தி சினிமாவுக்கு வருடத்தொடக்கத்தில் புத்துணர்ச்சியும், நம்பிக்கையும் ஏற்படுத்தியுள்ளது பதான் படத்தின் விஸ்வரூப வெற்றியும் வசூல் கணக்கும்.
நான்கு வருடம் கழித்து நாயகனாக நடித்து வெளிவந்த பதான் படத்தின் வெற்றி மூலம் இன்னும் நான் பாலிவுட் பாட்சா தான் என்பதை ஷாருக்கான் நிரூபித்துள்ளார்.
அவரது மதத்தை அடையாளப்படுத்தி அவர் நாயகனாக நடிக்கும் படங்களை இந்து மத தீவிரவாதிகள் குதறி எடுத்தாலும், பாய்காட் பதான் என்றாலும் இந்தியாவில் சினிமா ரசிகனும், மக்களும் மொழி, மதம்,இனம் துறந்து படங்களை பார்ப்பதையும், ஆராதிப்பதையும் தொடர்கின்றனர்.
இதை தென்னிந்திய மொழி படங்கள் வட இந்தியாவில் வெற்றி பெறுவதும் தென்னிந்தியாவில் இந்தி படங்கள் வெற்றி பெறுவதும் உறுதிப்படுத்துகிறது. அதன்படி குடியரசு தினத்தை முன்னிட்டு கடந்த ஜனவரி 25ஆம் தேதி வெளியான பதான் படம் 5 நாள் முடிவில் இதுவரை உலகம் முழுவதும் 560 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.
இந்நிலையில் பதான் படத்தின் வெற்றியை மகிழ்ச்சியுடன் அறிவிக்க ஷாருக்கான், நாயகி தீபிகா படுகோன் மற்றும் படக்குழுவினர் மும்பையில் நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.
நிகழ்ச்சியில் படத்தின் வெற்றி குறித்து உணர்ச்சி பொங்க பேசிய நாயகி தீபிகா படுகோனே, “உண்மையாக கூற வேண்டுமென்றால், சாதனைகளை முறியடிக்க போகிறோம் என்று நான் நினைக்கவில்லை,
இந்த வெற்றி திருவிழா போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது. ரசிகர்கள் அனைவரின் அன்பை பார்க்கும்போது படம் அதற்கு தகுதியானதே என தோன்றுகிறது” என்றார்.
நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்னதாக ஷாருக் கான், ஜான் ஆபிரஹாம், தீபிகா படுகோனே மூவரும் பத்திரிக்கையாளர்களுக்கு போஸ் கொடுத்தனர். அப்போது ஷாருக்கானுடன் போஸ் கொடுத்த தீபிகா அவரை கட்டிபிடித்து முத்தம் கொடுத்தார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இராமானுஜம்
தென் தமிழகத்தில் கன மழை: வானிலை ஆய்வு மையம்!
பட்ஜெட் கூட்டத்தொடர்: குடியரசு தலைவர் உரையுடன் இன்று துவக்கம்!