pathan movie censor

காவி உடை : சிக்கலில் பதான் சென்சார்!

சினிமா

ஷாருக்கான் தீபிகா படுகோன் நடித்துள்ள  ‘பதான்‘ படத்தில் ” பேஷரம் ரங்” பாடல் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அந்தப் பாடல் காட்சி சம்பந்தமான புகைப்படங்களும் வெளியானது.

அதில் தீபிகா படுகோனே காவி நிற பிகினி ஆடையும், ஷாருக்கான் பச்சை நிற ஆடையும் அணிந்தவாறு டூயட் பாடுகின்றனர்.

இதனைச் சுட்டிக்காட்டிய மத்தியப் பிரதேச உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா, “நடிகை தீபிகா அணிந்திருந்த ஆடை நிறத்தை சுட்டிக்காட்டி காவி உடை வேண்டுமென்றே அவமதிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்திற்கு தடை விதிக்க வேண்டும்” என்றார்

சமூக வலைதளத்தில் பாடல் காட்சிக்கு ஆதரவு – எதிர்ப்பு என சமபலத்தில் இருந்து வருகிறது.

பாஜக தலைவர்கள், அக்கட்சி ஆட்சியில் இருக்கும் மாநில அமைச்சர்கள், இந்து மத தலைவர்கள் என அனைத்து தரப்பில் இருந்தும் காவி நிற உடையை மாற்ற வேண்டும் என கூறி வருகின்றனர்.

முடியாது என்றால் பாஜக ஆளும் மாநிலங்களில் படத்தை வெளியிடவிடாமல் தடுப்போம் என்று பகிரங்கமாக பொதுவெளியில் பேசி வருகின்றனர்.

இதனால் பதான் திரைப்படம் சர்வதேச அளவில் முக்கியத்துவம்மிக்க, வெகுஜன தளத்தில் கவனிக்க கூடிய படமாக மாறிவிட்டது.

pathan movie censor Ex Chairman of Audit Board explanation

இந்த படம் ஜனவரி 25 ஆம் தேதி ரிலீசாகும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ள நிலையில் தணிக்கை சான்றிதழ் பெறுவதற்காக விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.

படத்தைப் பார்த்த மத்திய திரைப்பட தணிக்கை வாரியத் தலைவர் பிரசூன் ஜோஷி,

“படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள் உள்ளிட்ட பரிந்துரைக்கப்பட்ட சில மாற்றங்களை செயல்படுத்தி, திருத்தப்பட்ட பதிப்பை தியேட்டர் வெளியீட்டிற்கு முன்பு சமர்ப்பிக்கும்படி படக்குழுவிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஒரு படைப்புக்கும், சென்சிட்டிவான பார்வையாளர்களுக்கும் இடையே சரியான சமநிலையை தணிக்கை வாரியம் உறுதி செய்கிறது. இவை யாவும் முறையாக பின்பற்றப்பட்டு செயல்படுத்தப்படுகிறது.

ஆனால், அதேசமயம், மகத்தான நமது கலாசாரமும், நம்பிக்கையும் சிக்கலானதும், நுணுக்கமானதும் என்பதை நான் மீண்டும் இங்கே வலியுறுத்த விரும்புகிறேன். அதனை நாம் கவனமாக கையாள வேண்டும்.

நான் முன்பே கூறியது போல், படைப்பாளர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் இடையே உள்ள நம்பிக்கையை பாதுகாப்பது மிகவும் முக்கியமானது. படைப்பாளிகள் அதை நோக்கி உழைக்க வேண்டும்” என கூறியுள்ளார்

மேற்கண்ட தணிக்கை வாரிய தலைவரின் கருத்து பற்றி விமர்சனம் செய்து கடந்த 2015 முதல் 2017 வரை மத்திய திரைப்பட தணிக்கை வாரியத் தலைவராக இருந்த  பஹ்லஜ் நிஹலானி கூறியிருப்பதாவது,

“காவி நிறத்தை நீக்க மத்திய அரசு அழுத்தம் கொடுத்திருக்கலாம்” என கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், “காட்சிகளில் வரும் நிறங்களை நீக்க வேண்டும் என்ற எந்த வழிகாட்டுதலும் தணிக்கை குழுவுக்கான வழிகாட்டி விதிகளில் இல்லை.

சம்பந்தப்பட்ட காட்சிகள் ஆபாசமாகவோ, அருவருக்கத்தக்க வகையிலோ இருந்தால் மாற்றங்களை பரிந்துரைக்கலாம்.

எத்தனை காட்சிகளை நீக்க வேண்டும், மாற்ற வேண்டும் என்பதை முடிவு செய்வது தணிக்கைகுழுவின் உரிமை. அவர்கள் திருத்தப்பட்ட பதிப்பைப் பார்த்த பின்னரே வெளியிட முடியும். பாடலில் இடம்பெற்றுள்ள காவி நிறத்தை நீக்கச்சொல்லுமாறு மத்திய அரசிடமிருந்து தணிக்கை குழுவுக்கு  அழுத்தம் கொடுக்கப்பட்டிருந்தால் அது தவறான நடவடிக்கை” என தெரிவித்துள்ளார்.

இராமானுஜம் 

அதிகாலை துயரம் : பட்டாசு வெடித்து விபத்து – 4 பேர் பலி!

ஊர்வசியின் இன்ஸ்டாகிராம் பதிவு: கடுப்பான ரிஷப் பண்ட் ரசிகர்கள்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *