பருத்திவீரன் விவகாரத்தில் வருத்தம் தெரிவிப்பதாக தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தெரிவித்ததை அடுத்து, அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என நடிகரும், இயக்குநருமான சமுத்திரக்கனி தெரிவித்துள்ளார்.
கார்த்தி நடிப்பில் அமீர் இயக்கி வெளியான பருத்திவீரன் படம் தொடர்பான பிரச்சினைகள் தற்போது மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளன. இதுதொடர்பாக வருத்தம் தெரிவிக்கிறேன் என தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா நேற்று (நவம்பர் 29) அறிக்கை வெளியிட்டு இருந்தார்.
அந்த அறிக்கை வெளியான சில மணி நேரங்களில் இயக்குநரும், நடிகருமான சசிகுமார், ”போலியான வருத்தத்திற்கு உண்மையை பலி கொடுக்க முடியாது” என பதில் அறிக்கை வெளியிட்டார்.
இந்த நிலையில் இன்று (நவம்பர் 30) நடிகரும், இயக்குநருமான சமுத்திரக்கனி சற்று காட்டமாக ஞானவேல் ராஜாவுக்கு பதில் அளித்துள்ளார்.
அறம் வெல்லும்… வெல்வோம் pic.twitter.com/0NiNIomJTx
— P.samuthirakani (@thondankani) November 30, 2023
அதில், ” பிரதர் இந்த வருத்தம் தெரிவிக்கிற சீனெல்லாம் இங்க செல்லாது. நீங்க செய்ய வேண்டியது அன்னைக்கு ஏமாத்திட்டு போன பணத்தை ஒத்த பைசா பாக்கி இல்லாம திருப்பி கொடுக்கணும்” என தெரிவித்து மேலும் பல நிபந்தனைகளை விதித்து இருக்கிறார்.
இதனால் இந்த விவகாரம் தற்போது கன்னித்தீவு கதையாக மீண்டும் நீள ஆரம்பித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
-மஞ்சுளா
‘பொளீர் பொளீர்னு அடிப்பேன்’ எக்குத்தப்பாக வாயை விட்ட விஷ்ணு… சர்வாதிகாரியாக மாறிய நிக்ஸன்
விஜயகாந்த் பூரண குணமடைய வேண்டும்: எடப்பாடி பழனிசாமி