வந்தே பாரத் ரயிலில் நேற்று (அக்டோபர் 13) பயணம் செய்த நடிகர் பார்த்திபன், அவருக்குக் கொடுத்த உணவு தரமாக இல்லை என்று புகார் அளித்துள்ளார்.
வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் என்பது குளிரூட்டப்பட்ட நாற்காலி பெட்டிகளைக் கொண்ட அதிவிரைவு ரயிலாகும். இதில் டிக்கட் பதிவு செய்யும் பொழுது உணவுக்கும் சேர்த்து பணம் வசூலிக்கப்படும்.
இந்த ரயிலில் நேற்று இயக்குனர் பாத்திபன் பயணம் செய்துள்ளார். இந்த பயணத்தில் அவருக்கு அளிக்கப்பட்ட இரவு உணவு தரமற்று இருந்தது என்று ரயிலிலிருந்த புகார் புத்தகத்தில் அவர் பதிவுசெய்துள்ளார். மேலும் அவர் அளித்த புகாரைப் படம்பிடித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் இன்று (அக்டோபர் 14) பதிவிட்டுள்ளார்.
அதில் ” உணவு பரிமாறியவர்கள் சிறப்பாகச் செய்தனர். ரயில் சுகாதாரமாக இருந்தது. ஆனால், இரவு 7.22 மணிக்கு வழங்கிய உணவு மற்றும் சிக்கன் படு மோசமாக இருந்தது.
உணவுக்காகப் பெருந்தொகையை வாங்கிக் கொண்டு, இப்படி பரிமாறுவது கண்டிக்கத்தக்கது. ஆரோக்கியம் அவசியம்.” என்று பார்த்திபன் எழுதியிருந்தார்.
இதற்கு முன் வந்தே பாரத் ரயிலில் பயணம் செய்த சில பயணிகள், உணவு தரமாக இல்லை, மழை பெய்தால் ரயில் பெட்டிக்குள் மழை நீர் ஒழுகுகிறது போன்ற புகார்களைத் தெரிவித்திருந்தார்கள். இந்த நிலையில் நடிகர் பார்த்திபனும் தற்போது புகார் அளித்துள்ளார்.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
கனமழை : ஐடி ஊழியர்கள் வீட்டிலிருந்த வேலை செய்ய அறிவுறுத்தல்!
சென்னைக்கு காத்திருக்கும் கனமழை… தயார் நிலையில் போட், ஜேசிபி, நிவாரண முகாம்கள்!
பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ரவியிடம் புகார் அளித்தாரா மாணவர்?