parthiban join hands with d imman

பார்த்திபன் – டி.இமான் கூட்டணியில் புதிய படம்!

சினிமா

நடிகர் சிவகார்த்திகேயன் தனக்கு துரோகம் செய்து விட்டார் என்று சமீபத்தில் இசையமைப்பாளர் டி. இமான் முன்வைத்த குற்றச் சாட்டு சினிமா வட்டாரத்தில் மட்டுமின்றி ரசிகர்கள் மத்தியிலும் அதிர்வலைகளை கிளப்பியது.

டி.இமானின் இந்த குற்றச்சாட்டு குறித்து பேசிய டி. இமானின் முன்னாள் மனைவி மோனிகா, ’டி.இமான் தான் அனைத்து தவறுகளையும் செய்தார், சிவகார்த்திகேயன் மீது எந்த தவறும் இல்லை. பட வாய்ப்புகள் இல்லாததால் தான் சிவகார்த்திகேயன் மீது குற்றம் சாட்டி பப்ளிசிட்டி தேடுகிறார்’ என்று விமர்சித்தார்.

இந்த பஞ்சாயத்து இன்னும் முடியாமல் நீண்டு கொண்டே இருக்கிறது. சமூக வலைதளங்களிலும் இமான் – சிவகார்த்திகேயன் குறித்து பலரும் தங்களது கருத்துகளை கூறிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் இயக்குனரும், நடிகருமான பார்த்திபன் தனது புதிய படத்தில் டி. இமான் உடன் இணைந்து பணியாற்றுவது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்.

அந்த பதிவில், ”வா’வென
வாய் பிளந்து
வரவேற்று
வாய் நனைய முத்தமிட்டு
இறுதிவரை இருக்க விரும்பி
இறுக அணைத்தாலும்…
திட்டமிட்டபடி
சட்டென விட்டு
வி ல கி
சென்றுவிடும்
சென்ற வினாடிகள்!!!

தும்பைப் பூவின் மீது
தூய்மையான
பனித்துளி படர்ந்து
தும்பிகளின் மெல்லிய ரீங்காரத்தைக் கூட
மெலோடியாய் ரசிக்கும் சில உறவுகளும்
பூப்பதுமுண்டு!
இசையை விட தூய்மையானது எது?
சென்ற படத்தில் ரகு மானுடன் இணைந்த நான்
வரும் படத்திலும் ஒரு மானுடன் இணைகிறேன்.
இம்மான் …. இமான்!
அபார ஞானமும்
அயராத உழைப்புமாய்
அடுத்தடுத்த மணிகளில் மனிதர் 5 பாடல்களை பிரசவித்தார். இன்னும் இரண்டு கர்ப்பத்தில்.
மைனா’வின் குரல் போல் இவரின் இசையும் இனிமை. அன்றிலிருந்து அவரின் இசையும் ஒரு அன்றில் பறவையாய் என் ரசனை வானில் பறந்துக் கொண்டிருந்தது.
இனி…
இனிமை
இசையாய்…
Ok!
Tittle ?
அறிவிப்போம் விரைவில்!” என்று தெரிவித்திருந்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

இயக்குனரும், நடிகருமான பார்த்திபன் இயக்கத்தில் கடைசியாக வெளியான இரவின் நிழல் திரைப்படம் கலவையான விமர்சனங்கள் பெற்றாலும், அவரது முயற்சிக்காக பெருமளவில் பாராட்டப்பட்டது.

இந்த நிலையில் தற்போது புதிய படத்தில் பார்த்திபன் வித்தியாசமாக என்ன செய்திருக்கிறார் என்பதை பார்க்க ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.

கார்த்திக் ராஜா

பொய்களை அடுக்கும் ஆர்.என்.ரவி: டி.ஆர்.பாலு கடும் கண்டனம்!

இலங்கை செல்ல இனி விசா தேவையில்லை!

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *