மீண்டும் பார்த்திபனின் புது முயற்சி: ‘TEENZ’ ஃபர்ஸ்ட் லுக்!

Published On:

| By Monisha

parthiban in teenz first look

இரவின் நிழல்’ படத்திற்கு பிறகு தற்போது இயக்குனரும் நடிகருமான பார்த்திபன் ஓர் புதிய படத்தை இயக்கியுள்ளார். குழந்தைகளை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்த படத்திற்கு ‘TEENZ’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இன்று (ஜனவரி 20) இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை இசை கலைஞர் லிடியன் நாதஸ்வரன் வெளியிட்டார். முதன்முறையாக சென்சார் சான்றிதழுடன் வெளியாகியுள்ள ஃபர்ஸ்ட் லுக் என்ற அந்தஸ்தை TEENZ படம் பெற்றுள்ளது.

இது ஒரு அட்வென்சர் த்ரில்லர் கதைக்களத்தில் உருவாகி உள்ள படம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த படத்திற்கு டி. இமான் இசையமைத்துள்ளார். ஜிகர்தண்டா, அச்சம் என்பது மடமையடா போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணிபுரிந்த கவாமிக் யூ ஆரி TEENZ படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

பயாஸ்கோப் ட்ரீம்ஸ் நிறுவனம் மற்றும் அகிரா புரொடக்ஷன்ஸ் ஆகிய இரு நிறுவனங்கள் இணைந்து இந்த படத்தை தயாரித்து இருக்கிறது. இந்த படத்தின் படத்தொகுப்பாளராக ஆர். சுதர்சன் பணியாற்றியுள்ளார்.

ஒவ்வொரு படத்திலும் பார்த்திபனின் வித்தியாசமான சிந்தனைகள் ரசிகர்களை பிரமிக்க வைக்கும். அந்த வகையில் தற்போது TEENZ படத்தில் பார்த்திபன் அவர்களின் மேஜிக்கை காண ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். கூடிய விரைவில் இந்த படம் குறித்த அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

– கார்த்திக் ராஜா

நடிகையை 3-வது திருமணம் செய்த சானியா மிர்சாவின் கணவர்… அப்போ அது உண்மை தானா?

தமிழில் கம்பராமாயண பாராயணம்: ரசித்து கேட்ட பிரதமர் மோடி

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel