“முழுநிலவாய் படப்பிடிப்பு தளத்தில் நுழைபவர்” : நந்தினி குறித்து சின்ன பழுவேட்டரையர்

சினிமா

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்துள்ள நடிகர் பார்த்திபன், ஐஸ்வர்யா ராயுடன் இணைந்து படப்பிடிப்பு தளத்தில் எடுத்த புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

பொன்னியின் செல்வன் திரைப்படம் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

மணிரத்னம் இயக்கியுள்ள இப்படத்தில், விக்ரம், கார்த்தி, பார்த்திபன், ஜெயம் ரவி, சரத்குமார், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் என ஒரு பெரிய பட்டாளமே நடித்துள்ளனர்.

parthiban drops unseen pics of aishwarya rai

ஏ.ஆர் ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். தமிழ் இலக்கிய உலகில் மிகவும் புகழ்பெற்ற பொன்னியின் செல்வன் நாவல் திரைப்படம் ஆவதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகளவில் உள்ளது.

ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சில மணி நேரங்களிலேயே, பெரும்பாலான தியேட்டர்களில் டிக்கெட் விற்றுத்தீர்ந்து விட்டது.

பொன்னியின் செல்வன் படக்குழுவினர், சென்னை, மும்பை, கேரளா உள்ளிட்ட இடங்களில் படத்தின் புரோமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

parthiban drops unseen pics of aishwarya rai

நடிகர் பார்த்திபன் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில், சின்ன பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இவர் நந்தினி கதாபாத்திரத்தில் நடித்த ஐஸ்வர்யா ராயுடன் எடுத்த புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இன்று (செப்டம்பர் 26) பார்த்திபன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “ஐஸ் வாரியம் ! கற்றுக் கொள்ள…. காற்று கொள்ளும் மூங்கில் துளைகளில் இருந்து இசை வரும் என கோடியாய் கொட்டிக் கிடக்கின்றது இப்பூமியில்.

அப்படி இப்பெண்ணிடமிருந்து… தாயானப் பிறகும், தான் விரும்பும் கலையை தொடர, ஆரோக்கியத்தை+அழகை காத்திட கடும் முயற்சியும்,விடா பயிற்சியும் செய்கிறார்.

அழகென நான் காண்பது, பிறைநிலவு வானில் இருந்து மறையுமுன்னே முழுநிலவாய் படப்பிடிப்பு தளத்தில் நுழைபவர், வசனங்களை (இடை வரும் புன்னகை உட்பட) மனப்பாடம் செய்து ஒன் மோர் கேட்கா ஈகோவுடன் தயாராகிவிட்டு, பின் அனைவரிடமும் (selfie) அன்பொழுக பழகுகிறார்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

மு.செல்வம்

பொன்னியின் செல்வன்: ஜோராக விற்பனையான டிக்கெட்!

ஆர்டர் செய்தது ட்ரோன் கேமரா… வந்தது பொம்மை கார்!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *