ஜிகர்தண்டா 3 பார்த்த பார்த்திபன்?

சினிமா

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர்கள் ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ் ஜே சூர்யா நடிப்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான படம் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்.

2014 ஆம் ஆண்டு வெளியான ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகமாக வெளியான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்திற்கு தொடர்ந்து தமிழ் சினிமா விமர்சகர்களும் ரசிகர்களும் குட் மார்க்ஸ் கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தை பார்த்த இயக்குனரும் நடிகருமான பார்த்திபன் தனது சமூக வலைதள பக்கத்தில் ஜிகர்தண்டா 3 பார்த்தேன் என பதிவிட்டு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.

அவரது பதிவில், “Jigarthanda -3’ பார்த்தேன் FDFS என என்றாவது ஒரு நாள் நான் பதிவிடுவேன். காரணம், ஜிகர்தண்டா -2 நான் விமர்சகன் அல்ல. நிறை குறை சொல்ல. தெரியாமல் போய்,போன இடத்தில் பிடித்து விட்டால் அதன் பெயர் பேய்.  இது கார்த்திக் சுப்புராஜ் என்ற பேயை பிடித்து போய் தானே படத்திற்கே போகிறேன்.நினைத்தபடியே மனதை உலுக்கி விட்டது. Mr lawrence , mr s j surya, சந்தோஷ் நாராயணன், கதிரேசன் இன்னும் நாயகி உட்பட பலரும் யானை பலத்துடன் மிரட்டுகிறார்கள். மிரட்டும் யானைகளோ நம் கண்களில் நீர் சுரக்க நடிக்கிறார்கள். பெரும்பாலான காட்சிகளில் கரைந்தேன். Jigarthanda -1 நான் நடித்திருக்க வேண்டிய படம். முதல் பட அறிமுகத்திற்கு முன்பே நண்பர் திரு கார்த்திக் சுப்புராஜை எனக்கு அறிமுகம் என்பதால் கூடுதல் மகிழ்ச்சி. தியேட்டரில் வெடித்த கைதட்டல்களை தீபாவளி பட்டாசாக ரசித்தேன்” என்று பதிவிட்டுள்ளார்.

பார்த்திபன் மட்டுமின்றி தமிழ் சினிமாவில் பல பிரபலங்கள் தொடர்ந்து ஜிகர்தண்டா 2 படத்தை பாராட்டி இயக்குனர் கார்த்திக் சுப்புராஜுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

– கார்த்திக் ராஜா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

உதவியாளருக்கு காயம்: மாநகராட்சி ஆணையருக்கே இந்த நிலையா?

ரவுடி கருக்கா வினோத் மீது குண்டாஸ் பாய்ந்தது!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *