தென்னிந்திய ஃபிலிம் பேர் விருது விழாவில் சூரரைப் போற்று திரைப்படத்திற்கு 8 விருதுகள் கிடைத்துள்ளன. ஜெய்பீம் சிறந்த திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டது.
தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளத் திரையுலகில் மிகச்சிறந்த திரைப்படங்களைக் கொண்டாடும் வகையில் தென்னிந்திய பார்லே ஃபிலிம்ஃபேர் விருது வழங்கப்பட்டு வருகிறது.
67 வது தென்னிந்திய பார்லே ஃபிலிம்ஃபேர் விருதுகள் 2022 விழா நேற்று (அக்டோபர் 9) பெங்களூரில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இதில் 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் திரைக்கு வந்த படங்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டன.
சூரரைப் போற்று படத்திற்காக சூர்யாவுக்கு சிறந்த நடிகருக்கான விருது கிடைத்தது.
சிறந்த படத்திற்கான விருது ஜெய் பீம்முக்கும் கிடைத்த நிலையில், அந்தப்படத்தில் நடித்த லிஜோமோல் ஜோஸ் சிறந்த நடிகையாக தேர்வு செய்யப்பட்டார்.
சிறந்த தமிழ்ப்பட இயக்குனர் விருது சுதா கொங்கராவுக்கு கிடைத்தது.
சிறந்த துணை நடிகராக பசுபதி (சர்ப்பாட்டா பரம்பரை), சிறந்த துணை நடிகையாக ஊர்வசி (சூரரைப் போற்று) தேர்வு செய்யப்பட்டனர்.
சிறந்த இசைக்கான விருது சூரரைப் போற்று படத்திற்காக ஜி. வி. பிரகாஷ் குமாருக்கு வழங்கப்பட்டது.
சிறந்த பின்னணிப் பாடகர் கிறிஸ்டின் ஜோஸ் மற்றும் கோவிந்த் வசந்தா- (ஆகாசம் – சூரரைப் போற்று), சிறந்த பின்னணிப் பாடகி தீ (காட்டு பயலே-சூரரை போற்று)
சிறந்த நடன கலைஞராக வாத்தி கம்மிங் பாடலுக்காக தினேஷ் மாஸ்டரும், சிறந்த ஒளிப்பதிவுக்காக நிகேத் பொம்மிரெட்டியும் (சூரரைப் போற்று) விருதுகளைப் பெற்றுக் கொண்டனர்.
சிறந்த நடிகர்கள்(விமர்சகர்கள்) விருது சார்பட்டா பரம்பரைக்காக ஆர்யாவுக்கும், தலைவி படத்தில் நடித்த அரவிந்தசாமிக்கும்,
சிறந்த நடிகை(விமர்சகர்கள்) சூரரைப் போற்று படத்தில் நடித்த அபர்ணா பாலமுரளிக்கும் கிடைத்தது.
சிறந்த பாடலாசிரியராக சார்பட்டா பரம்பரைப் படத்தின் நீயே ஒளி பாடலுக்காக ராப் பாடகர் அறிவு விருது பெற்றார்.
தெலுங்கில் புஷ்பா சிறந்த படமாகவும், அல்லு அர்ஜுன் சிறந்த நடிகராகவும் அறிவிக்கப்பட்டனர். லவ் ஸ்டோரி படத்தில் நடித்த சாய் பல்லவி சிறந்த நடிகைக்கான விருதைப் பெற்றார்.
சிறந்த பின்னணி பாடகர் சித் ஸ்ரீராம் (ஸ்ரீவல்லி -புஷ்பா), சிறந்த பின்னணி பாடகி இந்திராவதி சௌஹான் – (ஓ ஆண்டவா புஷ்பா).
மலையாளத்தில் சிறந்த திரைப்படம் ஐயப்பனும் கோஷியும். சிறந்த நடிகர் பிஜு மேனன் (ஐயப்பனும் கோஷியும்), சிறந்த நடிகை நிமிஷா சஜயன் ( தி கிரேட் இந்தியன் கிச்சன் )
கன்னடத்தில் சிறந்த படம் சட்டம் 1978. சிறந்த நடிகர் தனஞ்சய் (படவா ராஸ்கல்), சிறந்த நடிகை யாக்னா ஷெட்டி (படவா ராஸ்கல்)
வாழ்நாள் சாதனையாளர் விருது மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாருக்கும், பிரபல நடிகர் அல்லு அர்ஜூனின் தந்தை அல்லு அரவிந்துக்கும் வழங்கப்பட்டது.
இந்த பிரம்மாண்டமான நிகழ்ச்சியினை திக்நாத் மற்றும் ரமேஷ் அரவிந்த் ஆகியோர் தொகுத்து வழங்கினர். பூஜா ஹெக்டே, மிருணால் தாக்கூர், கிருத்தி ஷெட்டி, ஆகியோரின் கண்கவர் நிகழ்ச்சிகள் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.
கலை.ரா
சட்டத்தை மீறினார்களா நயன் விக்கி தம்பதி ?
இந்திய சினிமாவின் ‘பாகுபலி’ ராஜமௌலியின் கதை!