“பார்க்கிங்” : 5 மொழிகளில் ரீமேக்!

Published On:

| By Kavi

தமிழ் சினிமாவில் தனக்கு ஏற்ற கதைகளை சரியாக தேர்வு செய்து நடித்து வருபவர் நடிகர் ஹரிஷ் கல்யாண்.

கடந்த ஆண்டு இவரது நடிப்பில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளியான “பார்க்கிங்” திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூல் செய்தது.

இந்த படத்தில் ஹரிஷ் கல்யாணுடன் நடிகர்கள் இந்துஜா, எம்.எஸ்.பாஸ்கர், ராமா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

வாடகை வீட்டில் வாழும் ஹரிஷ் கல்யாண் மற்றும் எம்எஸ் பாஸ்கர் ஆகிய இருவருக்கும் இடையே கார் பார்க்கிங் பிரச்சனையினால் உருவாகும் ஈகோ, இவர்களின் வாழ்க்கையை எவ்வாறு தலைகீழாக மாற்றுகிறது என்பதே இந்த படத்தின் மையக்கரு.

இந்தப் படத்தில் நடித்ததற்காக ஹரிஷ் கல்யாணத்துக்கு பல பாராட்டுக்கள் கிடைத்தது. அதேபோல் ஈகோ பிடித்த 60 வயது நபராக நடித்த எம் எஸ் பாஸ்கரின் நடிப்பை கண்ட ரசிகர்கள் அவரை கொண்டாடினர்.

Passion studios நிறுவனம் மற்றும் Soliders Factory நிறுவனம் இணைந்து தயாரித்த இந்த படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்திருந்தார்.

இந்நிலையில் தற்போது “பார்க்கிங்” படம் குறித்த ஒரு சூப்பர் தகவல் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

பார்க்கிங் படம் மொத்தம் 5 மொழிகளில் ரீமேக் செய்ப்பட உள்ளதாம். இதில் மற்றொரு சிறப்பு என்னவென்றால், ஐந்து ரீமேக்கில் 4 ரீமேக்குகள் இந்திய மொழிகளிலும் மற்றும் 1 ரீமேக் இன்டர்நேஷனல் மொழியிலும் உருவாக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

மேலும் இது குறித்த பேச்சு வார்த்தைகள் சமூகமாக முடிந்து விட்டதாகவும், ரீமேக் உரிமையும் விற்கப்பட்டு விட்டதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

– கார்த்திக் ராஜா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

வேலைவாய்ப்பு : சென்னை கலாஷேத்ராவில் பணி!

கோவை : மூடப்படாத பாதாள சாக்கடையில் சிக்கிய அரசு பேருந்து!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share