நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் பார்க்கிங்.
இந்த படத்தில் ஹரிஷ் கல்யாணுடன் நடிகர்கள் இந்துஜா, எம்.எஸ்.பாஸ்கர், ராமா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். Passion studios நிறுவனம் மற்றும் Soliders Factory நிறுவனம் இணைந்து பார்க்கிங் படத்தை தயாரித்துள்ளது. சாம் சி.எஸ். இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
சமீபத்தில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் பாடல் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. செப்டம்பர் 28 ஆம் தேதி பார்க்கிங் படம் வெளியாகும் என்று கூறப்பட்டிருந்த நிலையில் ஏதோ சில காரணத்தினால் படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது இந்த படத்தின் புரோமோ வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. அந்த புரோமோ வீடியோவில் நடிகர் ஹரிஷ் கல்யாண் பார்க்கிங் என்று எழுதப்பட்டுள்ள பெயர் பலகையை தெரு தெருவாக கொண்டு போய் தனது படத்தை புரோமோஷன் செய்வது போன்று காட்சியமைக்கப்பட்டுள்ளது. மேலும் வீடியோவின் இறுதியில் பார்க்கிங் படத்தின் ட்ரெய்லர் வரும் நவம்பர் 17 ஆம் தேதி வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
5 ஸ்டார் நிறுவனம் சார்பில் செந்தில் இந்த படத்தை ரிலீஸ் செய்கிறார்.
வரும் டிசம்பர் 01 ஆம் தேதி பார்க்கிங் படம் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
– கார்த்திக் ராஜா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கனமழை எச்சரிக்கை: சென்னை பள்ளிகளுக்கு விடுமுறை!
கனமழை எதிரொலி: 27 மாவட்ட ஆட்சியர்களுக்கு பறந்த அவசர கடிதம்!