பழனி பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மாத்திரைகள் கலந்திருப்பதாக இயக்குனர் மோகன் ஜி சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்த நிலையில், திருச்சி மாவட்ட ரூரல் போலீசார் இன்று (செப்டம்பர் 24) அவரை கைது செய்தனர்.
திருப்பதி கோவிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் விலங்கு கொழுப்பு கலந்த நெய் பயன்படுத்தப்பட்ட விவகாரம் தேசிய அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தநிலையில், இயக்குனர் மோகன் ஜி சமீபத்தில் ஐபிசி தமிழ் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், “பழனி கோயில் பஞ்சாமிர்தத்துல ஆண்மைக்குறைவு ஏற்படுத்துற கருத்தடை மாத்திரைகள் பயன்படுத்திருக்காங்கன்னு நான் செவி வழியா கேள்விப்பட்டேன்.
அங்க பணிபுரியிற ஊழியர்கள், அந்த ஊரை சேர்ந்தவங்க இந்த தகவலை என்கிட்ட சொன்னாங்க. அந்த நியூஸ் வெளிய வராம உடனே தடுத்து நிறுத்திட்டாங்க. நான் ஆதாரம் இல்லாம எதையும் பேச மாட்டேன்” என்று தெரிவித்திருந்தார்.
அவரது கருத்துக்கு இணையத்தில் பலரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்தநிலையில், மோகன் ஜியை சென்னை காசிமேட்டில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து திருச்சி மாவட்ட ரூரல் போலீசார் இன்று கைது செய்தனர். தொடர்ந்து திருச்சிக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ரோகித் சர்மா மதில் மேல் பூனை… எந்தெந்த வீரர்கள் வெளியேறுகிறார்கள்?
உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி… “ஏமாற்றம் இருக்காது” – ஸ்டாலின் பேட்டி!