“அந்த இயக்குநர் என்னை அறைந்தார்”: நடிகை பத்மபிரியா

Published On:

| By Kumaresan M

தமிழில், தவமாய் தவமிருந்து. சத்தம் போடாதே. பட்டியல், மிருகம்,  உட்பட பல படங்களில் நடித்திருப்பவர் பத்மபிரியா.

மலையாளத்தில் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.  இவர்,  கடந்த 2007-ம் ஆண்டு  ‘மிருகம்’ படத்தில் நடித்தபோது, படக்குழுவினர் பத்மபிரியாவை டார்ச்சர் செய்துள்ளனர். அந்த படத்தின்  இயக்குநர் சாமி, படப்பிடிப்பின் கடைசி நாளில் பத்மபிரியாவின் கன்னத்தில் அறைந்த விவகாரம் அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.

தற்போது, அந்த சம்பவம் பற்றி மீண்டும் கேரள மாநிலம் வடகராவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பத்மபிரியா பேசியுள்ளார்.

ஒரு பெண் பிரச்சினைகளைப் பற்றிப் பேசினால், அவளையே பிரச்சினையாக்கி விடுகிறார்கள். மிருகம் படப்பிடிப்பில் என்னை டைரக்டர் சாமி கன்னத்தில் அறைந்தார். ஆனால், ஊடகங்களில் நான் அந்த இயக்குநரை நான் அடித்ததாகச் செய்தி வெளியானது.

பிறகு தமிழ்த் திரைப்படச் சங்கங்களில் புகார் அளித்தேன். இயக்குநருக்கு ஆறு மாதம் படம் இயக்க தடை விதிக்கப்பட்டது. இயக்குநரை கேள்வி கேட்டதால் ஏற்கெனவே ஒப்பந்தமான படங்களில் இருந்தும் நீக்கப்பட்டேன். ஆனால் அந்தப் படத்தில் நடித்ததற்காக மாநில அரசு சிறந்த நடிகைக்கான விருதை அளித்தது”என்று தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் பற்றி அப்போது ஒரு மீடியாவிடம் பேசிய டைரக்டர் சாமி, முக்கியமான காட்சி எடுக்கப்பட்ட போது, பத்மபிரியா எமோஷனலாக நடிக்கவில்லை. அதனால், அடித்தேன். சினிமா தொழிலில் நடிகைகள் அடி வாங்குவது ஒன்றும் புதிதல்ல. அது டென்ஷனில் நடந்த விஷயம் என்று கூறியிருந்தார்.

பத்மபிரியாவை அடித்ததற்காக, அவரிடத்தில் டைரக்டர் சாமி மன்னிப்பு கேட்டுக் கொண்டதாகவும் சொல்லப்பட்டது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

எம்.குமரேசன்

 2024 மகளிர் உலகக்கோப்பை : ஏ.ஐ. மென்பொருள் அறிமுகம்!

17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel