விஜயகாந்திற்கு பத்ம பூஷன் விருது!

சினிமா

டெல்லி ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இன்று (மே 9) தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது.

தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் கடந்த டிசம்பர் 28ஆம் தேதி சென்னையில் காலமானார். இவரது உடல் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் அடக்கம் செய்யப்பட்டது. தமிழகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கானோர் விஜயகாந்த் நினைவிடத்திற்கு வந்து அஞ்சலி செலுத்தினர்.

இதனையடுத்து கடந்த ஜனவரி 26ஆம் தேதி இந்தியாவின் உயரிய விருதான பத்ம விருதுகள் குடியரசு தினத்தை முன்னிட்டு அறிக்கப்பட்டது. இதில் 5பேருக்கு பத்ம விபூஷன் விருதும், 17 பேருக்கு பத்ம பூஷன் விருதுகளும் மற்றும் 110 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகளும் அறிவிக்கப்பட்டது.

இதில், கலைத்துறையில் சிறந்து விளங்கியதற்காக மறைந்த நடிகரும், தேமுதிக கட்சி நிறுவன தலைவருமான விஜயகாந்த்திற்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டது.

பத்ம பூஷன் விருதினை பெறுவதற்காக விஜயகாந்தின் மனைவியும், தேமுதிகவின் பொதுச்செயலாளருமான பிரேமலதா விஜயகாந்த் நேற்று (மே 8) சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி சென்றார். இவருடன் அவரது சகோதரர் சுதீஷும் சென்றுள்ளார்.

இந்நிலையில், இன்று டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில், விஜயகாந்திற்கு அறிவிக்கப்பட்ட பத்ம பூஷன் விருதை பிரேமலதா விஜயகாந்த் பெற்றுக்கொண்டார்.

இந்து

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

தவறான முன்னுதாரணமாகிவிடும்… கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் கூடாது: ED

இந்திரா காந்தியின் சாயல்…பிரியங்காவின் அரசியல் எழுச்சி…உத்திரப் பிரதேசத்தில் மீண்டெழுகிறதா காங்கிரஸ்!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *