இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் படத்திற்கு ‘தங்கலான்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
கோலார் தங்கவயல் உண்மையான வரலாற்றை மையமாக வைத்து 3டி தொழில் நுட்பத்தில் விக்ரம் நாயகனாக நடிக்கும் படத்தை இயக்கபோவதாக பா.ரஞ்சித் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.
தன்னுடைய திரைப்படங்களில் சாதி அரசியலை திரைக்கதையாக அமைத்து படங்கள் தயாரித்து, இயக்கி வருகிற பா.ரஞ்சித்தின் இந்த அறிவிப்பு சினிமா வட்டாரத்தை கடந்து பொது தளங்களிலும் விவாத பொருளாக மாறியது.

“தங்களது குருதிச் சேற்றில் மாபெரும் தங்க வயலை கட்டியெழுப்பி வரலாற்றில் உரமாகிப்போன மக்களின் ரத்த சரித்திரம்!,
மீண்டும் நண்பர் பா.இரஞ்சித்துடன் இணைந்து திரைக்கதை வசனம் எழுதும் திரைப்படத்தின் அறிமுக காணொளியை உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறேன்.
“என இப்படத்தில் இயக்குனர் பா.ரஞ்சித்துடன் இணைந்து திரைக்கதை எழுதியுள்ள தமிழ் பிரபா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
54 நொடிகள் மட்டும் ஓடக் கூடிய படத்தின் பெயரை அறிவிக்கும் வீடியோ காட்சி நேற்று வெளியானது.
அந்த வீடியோவில் இடம் பெற்றுள்ள ஒவ்வொரு ஃபிரேமும் மிரட்டும் தொனியில் உள்ளது. இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன்ஸ் மற்றும் நீலம் புரடெக்க்ஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது.
ஜி.வி.பிரகாஷ்குமார் இப்படத்திற்கு இசை அமைத்துள்ளார். விக்ரமுக்கு ஜோடியாக தங்கலான் படத்தில் மாளவிகா மோகனன் நடிக்கிறார் என்கிற அறிவிப்பும் டீசரில் அவரது தோற்றமும் வெளியாகி உள்ளது.

அத்துடன் மலையாள நடிகை பார்வதி நடித்துள்ள பிரம்மிக்கவைக்கும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளது.
சார்பட்டா பரம்பரை படத்தில் ரங்கன் வாத்தியாராக நடித்து அசத்திய பசுபதி தங்கலான் படத்தில் நாமம் போட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
மேலாடை அணியாமல் வேட்டியை கோவணம் போல கட்டிக் கொண்டு கையில் ஆயுதத்தை ஏந்தி விக்ரம் டீசரில் இடம்பெற்றதை பார்க்கின்ற போது கோலார் தங்க வயல் அடிமைகள் பற்றிய கதையாக இருக்ககூடும் என்பதை யூகிக்க முடிகிறது.
ஆனால் விக்ரம் ரசிகர்கள் மருதநாயகம் கமல் போல் விக்ரம் காதாபாத்திரம் அமைக்கப்பட்டுள்ளது என்கின்றனர்.
அதே வேளையில், விக்ரம் தோற்றத்தை பார்க்கின்றபோது, பாலா இயக்கத்தில் அதர்வா நடித்து வெளியான பரதேசி படத்தின் சாயலும் இருப்பதாக கூறப்படுகிறது
ராமானுஜம்
“ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையை சட்டப்படி சந்திப்போம்” – குற்றம்சாட்டப்பட்ட விஜயபாஸ்கர் பேட்டி!
தி பாஸ் ரிட்டர்ன்ஸ் : ஆக்ஷன் கெட்டப்பில் விஜய்