இயக்குநர் பா.இரஞ்சித்தின் நட்சத்திரம் நகர்கிறது திரைப்படம் ஆகஸ்ட் 31ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமா பேசாத, பேசத் தயங்கிய விஷயங்களை திரைப்படமாக வெளிக்கொண்டு வந்தவர், வருகிறவர் இயக்குநர் பா.இரஞ்சித்
தற்போது அவரின் புதிய படமான ‘நட்சத்திரம் நகர்கிறது படக்குழுவில்
காளிதாஸ் ஜெயராமன், துஷாரா விஜயன், ‘டான்சிங் ரோஸ்’ ஷபீர், கலையரசன் உட்பட பல நடிகர்கள், புது முகங்கள் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு டென்மா இசையமைத்துள்ளார். இப்படத்தை யாழி பிலிம்ஸ் நிறுவனமும் நீலம் புரொடக்ஷன்சும் இணைந்து தயாரிக்கிறது.
இந்த படத்தின் முதல்காட்சி மற்றும் ட்ரைலர் வெளியான போதே பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியதுடன், வரவேற்பையும் பெற்றது.
படத்தின் போஸ்டர் (LGBTQ) தன்பால் ஈர்ப்பாளர்களின் அடையாள கொடியின் வண்ணங்களை பிரதிபலிக்கும் வகையில் அமைந்திருந்தது.
இந்த நிலையில் படத்தின் ரிலீஸ் தேதியை இயக்குநர் இரஞ்சித் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அதன்படி, படமானது ஆகஸ்ட் 31ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- க.சீனிவாசன்