தங்கலான் படத்திற்கு பிறகு, பா.ரஞ்சித் இயக்கும் அடுத்த படம் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகி இருக்கின்றன.
கடந்த 2௦21-ம் ஆண்டு பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான படம் சார்பட்டா பரம்பரை. ஆர்யா ஹீரோவாக நடித்திருந்த இப்படத்தை பா.ரஞ்சித் தயாரித்து இருந்தார்.
இதில் ஆர்யாவுடன் இணைந்து பசுபதி, துஷாரா விஜயன், ஷபீர், ஜான் விஜய், கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். சந்தோஷ் நாராயணன் இசை அமைத்திருந்த இப்படம் ஓடிடி-யில் வெளியாகி ரசிகர்களிடம் பெருத்த வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் மீண்டும் பா.ரஞ்சித்-ஆர்யா கூட்டணி இணையவுள்ளது. தங்கலான் படத்திற்கு பின்னர் சார்பட்டா பரம்பரை படத்தின் 2-வது பாகத்தினை எடுக்க ரஞ்சித் திட்டமிட்டு இருக்கிறாராம். இதற்காக ஆர்யா தற்போது கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
Wanna be mentally and physically strong.. #ChennaiMMA is the place 🔥🔥💪💪💪#MrX #Sarpatta2 pic.twitter.com/5eWc529Xi1
— Arya (@arya_offl) January 30, 2024
அதோடு சார்பட்டா 2 படத்திற்காக தான் உடற்பயிற்சி செய்வதாக அவரே தெரிவித்து இருக்கிறார். ஆர்யாவின் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இதனால் விரைவில் சார்பட்டா 2 படத்தில் நடிக்கும் நடிக நடிகையர் மற்றும் தொழில்நுட்பக்குழுவினர் குறித்த, அதிகாரப்பூர்வ அறிவிப்பினை படக்குழு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மிஷ்கின் இசையில் வெளியானது ’டெவில்’ பாடல் வீடியோ!
பிரேமலதா விஜயகாந்த் வீட்டுக்கு சென்ற கனிமொழி : காரணம் என்ன?