ஓவியாவின் அடுத்த வீடியோ… பார்க்க படையெடுக்கும் ரசிகர்கள்!

சினிமா

களவாணி, மத யானைகூட்டம் போன்ற படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ஓவியா. சரியான படவாய்ப்பு இல்லாதபோது கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் பங்கேற்ற ஓவியாவுக்கு ஏராளமான ரசிகர்கள் உருவானார்கள்.

இந்த நிலையில், சில நாட்களுக்கு முன் ஓவியாவின் ஆபாச வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது. ரசிகர்கள் பலரும் ஓவியாவுக்கு ஆதரவாக அது அவர் இல்லை, மார்பிங் செய்யப்பட்ட வீடியோ என்று கூறிவந்தனர். சிலர்  ஓவியாவின் இன்ஸ்டாகிராம் கமெண்டில் “மேடம் வீடியோ ஒன்னு வந்திருக்குது, டைம் கம்மியாக இருக்குது… என்று கேட்டனர். இதற்கு, ஓவியா சளைக்காமல் என்ஜாய் என்று பதிலளித்து வியப்பை ஏற்படுத்தினார்.

தொடர்ந்து, ஆபாச வீடியோவை வெளியிட்டவர்கள் மீதும் சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க ஓவியா தீர்க்கமாக இருந்தார். தற்போது, சென்னையில் வசிக்கும் ஓவியா இந்த வீடியோக்களை நீக்கும்படி திருச்சூர் காவல்துறையிடம் ஆன்லைன் வழியாக புகார் அளித்துள்ளார். அதில், பெண்மைக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலுள்ள அந்த வீடியோக்களை நீக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளார். இதையடுத்து, திருச்சூர் சைபர் கிரைம் போலீசார்  3 வீடியோக்கள் நீக்கியுள்ளனர். மேலும், போலீசார் ஓவியாவின் ஆபாச வீடியோக்களை அப்லோடு செய்த நபர்கள் விரைவில் கண்டுபிடிக்கப்படுவார்கள் என்றும் கூறியுள்ளனர்.

இந்த சம்பவத்துக்கு பின்னணியில் ஓவியாவின் முன்னாள் காதலர் தாரிக் என்பவர் இருப்பதாக கூறப்படுகிறது. பல பெண்களின் மார்பிங் செய்யப்பட்ட வீடியோக்கள் அவரின் செல்போனில் இருந்ததால், அவருடன் இருந்த தொடர்பை ஓவியா கைவிட்டதாக தெரிகிறது. இதனால், ஓவியாவை பழிவாங்கும் நோக்கத்தில் இது போன்ற மார்பிங் செய்த வீடியோக்களை அவர்தான் இணையத்தில் கசிய விட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், எதையும் பற்றி அலட்டிக் கொள்ளாத ஓவியா தற்போது பாங்காங் நகருக்கு சுற்றுலா சென்றுள்ளார். பப்புக்கு பெயர் போன பாங்காங் நகரில் குத்தாட்டம் போட்ட ஓவியா ஆபாச சைகை காட்டியபடி நடனமும் ஆடியுள்ளார். தற்போது, அந்த வீடியோவையும் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.

இதை பார்த்த ரசிகர்கள் அவரின் பக்கத்தில் கமெண்டுகளை குவித்து வருகின்றனர். எவன் என்ன சொன்னால் என்ன? என் வழி தனி வழி என்று ஒருவர் பதிவிட்டுள்ளார். மற்றொருவர் உண்மை தெரியாமல் யாரும் மற்றவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி விமர்சிக்க வேண்டாமென்று  பதிவிட்டுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

எம்.குமரேசன்

10 லட்சம் ரொக்கம் 50 பவுன் நகை பத்தல… வரதட்சணை கொடுமையால் உயிரை மாய்த்த பேராசிரியர்!

ஆளுநருடன் மோதல் : பட்டமளிப்பு விழாவை புறக்கணித்த மா.சுப்பிரமணியன்

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0