மேஜர் முகுந்தின் திருமணத்துக்கு முதலில் எதிர்ப்பு தெரிவித்தது ஏன்? – இந்துவின் தந்தை சொன்ன காரணம்!
சமீபத்தில் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்ட அமரன் படம் செம ஹிட் அடித்தது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, இந்த படத்தை பார்த்து உருகினார்கள். மேஜர் முகுந்த் வரதராஜனின் மனைவி பெயர் இந்து ரெபேக்கா வர்க்கீஸ். இவர் கேரள கிறிஸ்தவ குடும்பத்தை சேர்ந்தவர்.
முகுந்தின் தந்தை பெயர் வரதராஜன். தாயார் பெயர் கீதா. சென்னை மெட்ராஸ் கிறிஸ்டின் காலேஜில் படித்த போது, இந்து முகுந்தை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 2009 ஆம் ஆண்டு இவர்களின் திருமணம் நடந்தது.
2014 ஆம் ஆண்டு முகுந்த் தீவிரவாதிகளுடனான மோதலில் இறந்து போனார். அவர் இறந்து 10 ஆண்டுகளுக்கு பிறகு அமரன் படம் வெளியாகி பட்டி தொட்டியெல்லாம் முகுந்த் வரதராஜனின் தியாகத்தை பறை சாற்றியுள்ளது. இந்த படத்தில் இந்து – முகுந்த் காதலுக்கு இந்துவின் தந்தை முதலில் எதிர்ப்பு தெரிவிப்பது போல காட்சி அமைக்கப்பட்டிருக்கும்.
தற்போது, இந்துவின் தந்தை ஜார்ஜ் வர்கீஸ் திருவனந்தபுரத்தில் மருத்துவமனை நடத்தி வருகிறார். இந்த நிலையில், தனது மருமகன் குறித்து ஜார்ஜ் வர்க்கீஸ் மனம் திறந்து பல விஷயங்களை பேசியுள்ளார்.
இது குறித்து, கேரள கவுமதி பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில் ஜார்ஜ் வர்க்கீஸ் கூறுகையில், ‘நான் ராணுவ மருத்துவமனையில் பணி புரிந்த போது, பல ராணுவ வீரர்கள் காயமடைந்து கிடப்பதை பார்த்துள்ளேன்.
இதனால்தான் தொடக்கத்தில் எனது மகள் திருமணத்துக்கு நான் எதிர்ப்பு தெரிவித்தேன். ஆனால்,என் மகளும் மருமகனும் உறுதியாக இருந்ததை பார்த்து நான் மனம் மாறினேன். என் மருமகன் ஒரு துணிச்சலான ராணுவ வீரர். எனது மகள் முகுந்தின் தியாகத்தை உலகம் அறிய விரும்பினார். தற்போது, அமரன் படம் வழியாக இளைஞர்களுக்கு என் மருமகன் முன் மாதிரியாக மாறியுள்ளார்’ என்று தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
கோழிப்பண்ணை செல்லதுரை பட விவகாரம் : கரு.பழனியப்பனுக்கு சீனு ராமசாமி பதில்!
வயநாடு இடைத்தேர்தல் : ராகுலின் சாதனையை முறியடித்த பிரியங்கா