இன்று(ஆகஸ்ட் 30) பல படங்கள் ஹாட்ஸ்டார், நெட்ஃபிலிக்ஸ், Zee5 போன்ற ஓடிடி தளங்களில் வெளியாகியிருக்கிறது.
அதன் பட்டியில் இதோ….
கனாக் காணும் காலங்கள் –டிஸ்னி –ஹாட்ஸ்டார்
விஜய் தொலைக்காட்சியில் 2006-ஆம் ஆண்டு வெளியாகி, மக்களால் விரும்பி பார்க்கப்பட்ட கனாக் காணும் காலங்கள் தொடரின் மறு உருவாக்கம்தான் இந்த இணையத் தொடர். இந்த தொடரின் முதல் பாகம் 2022 வருடமும், இரண்டாம் பாகம் 2023 வருடமும் வெளியானது. இப்போது இத்தொடரின் மூன்றாம் பாகம் வெளியாகியுள்ளது.
முர்ஷித்- Zee5 (ஹிந்தி)
பிரபல பாலிவுட் நடிகர் கேகே மேன்ன், தனுஜ் விர்வானி, அனங்க் தேசாய் போன்றவர்கள் நடித்திருக்கும் இத்தொடரை ஷ்ரவன் திவாரி இயக்கியுள்ளார்.
ஒரு முன்னாள் ரவுடி தனது மகனைக் காப்பாற்றுவதற்காக மீண்டும் அடிதடியில் இறங்குவதால் அவனுக்கு ஏற்படும் பின்விளைவுகள் தான் இந்த தொடரின் கதை.
கேடட்ஸ் – ஜியோ சினிமா (ஹிந்தி)
இந்தத் தொடர் இந்திய ராணுவத்தில் சேரவிருக்கும் 4 மாணவர்கள், ராணுவ பயிற்சி முகாமில் சந்திக்கும் சவால்களைச் சொல்கிறது.
இந்தத் தொடரை விஷ்வஜாய் முகர்ஜீ இயக்கியுள்ளார்.
பிரெத்லெஸ் – நெட்ஃபிலிக்ஸ் ( ஸ்பேனிஷ்)
ஸ்பெயினில் உள்ள ஒரு மருத்துவமனையில் வேலை செய்யும் மருத்துவர்களின் தினசரி வாழ்க்கை பற்றின கதை இது.
தி டெலிவரன்ஸ் – நெட்ஃப்லிக்ஸ் (ஆங்கிலம்)
உண்மை கதையின் அடிப்படையில் எடுக்கப்பட்டதாகச் சொல்லப்படும் இந்த படம் ஒரு தாய், தனது நான்கு குழந்தைகளுடன் ஒரு புது வீட்டுக்கு குடிபெயர்ந்து போன பின்பு அங்கு இருக்கும் அமானுஷ்ய சக்திகளால் அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகளைக் காட்சிப்படுத்தியுள்ளது.
இண்டரகேஷன் – Zee5 (ஹிந்தி)
கொலை செய்யப்பட்ட ஒரு ஓய்வு பெற்ற நீதிபதியின் வழக்கை விசாரிக்கும் காவல்துறை அதிகாரிகள் சந்திக்கும் இடர்பாடுகள் பற்றின திரில்லர் கதை இது.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
எத்தனை கோடி கொடுத்தா என்ன? பான்மசாலா விளம்பரம் வேண்டாம் : நடிகர் மாதவன் முடிவின் பின்னணி!
தங்கம் விலை சரிவு…நகை பிரியர்கள் மகிழ்ச்சி!
ரூ.3.6 கோடி கடன்: வட்டியுடன் செலுத்த நடிகர் விமலுக்கு உத்தரவு!