இந்த வாரம் அமேசான் பிரைம், நெட்ஃப்லிக்ஸ் போன்ற OTT யில் மலையாளம், இந்தி, ஆங்கிலம் போன்ற மொழிகளைச் சார்ந்த படங்கள் வெளியாகியிருக்கின்றன.
அந்த படங்களின் பட்டியலை இங்கு பார்ப்போம்
செப்டம்பர் 5
தி பெர்ஃபெக்ட் கப்பில் (The Perfect Couple) – ஆங்கிலம்
ஒரு பணக்காரரின் கல்யாண வீட்டில், அடையாளம் தெரியாத நபரின் உடல் கண்டெடுக்கப்படுகிறது. அதனால், கல்யாணத்திற்கு வந்திருக்கும் அனைவரும் சந்தேகிக்க படுகிறார்கள். அதற்குப் பின்பு என்ன நடக்கிறதுதான் என்பது தான் கதை.
ஹாலிவுட்டின் பிரபல நடிகையான நிகோல் கிட்மேன், லீவ் ஷ்ரைபர், இஷான் கட்டர் போன்றவர் இந்த படத்தில் நடித்துள்ளார்கள்.
இந்த படம் நெட்ஃப்லிக்ஸில் வெளியாகியுள்ளது.
குடி ஹர்யானே வால் தீ – இந்தி
பஞ்சாபைச் சேர்ந்த இந்த படத்தின் கதாநாயகன், மல்யுத்தத்தில் ஆர்வம் கொண்ட ஹரியானாவைச் சேர்ந்த பெண் மீது காதல் கொள்கிறான். அதனால் கதாநாயகனும் மல்யுத்தம் கற்றுக்கொள்ளத் தொடங்குகிறான்…அதற்கு அவனின் காதல் என்ன ஆனது என்பது தான் கதை.
அம்மி விர்க், சோனம் பஜ்வா போன்றவர்கள் நடித்துள்ள இந்த படம் சௌபல் (Chaupal) என்ற ஒடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
செப்டம்பர் 6
கால் மி பே (Call Me Bae) – இந்தி
அனன்யா பாண்டே, வீர் தாஸ், மினி மாதூர் போன்றவர்கள் நடித்துள்ள இந்த படம் அமேசான் பிரைம் தளத்தில் வெளியாகியுள்ளது.
தனது சொத்துக்கள் அனைத்தையும் இழந்த கதாநாயகி எப்படி கஷ்டப்பட்டு மீண்டு வருகிறாள் என்பது தான் இந்த படத்தின் கதை.
கில் (Kill)
டெல்லியை நோக்கி ரயிலில் பயணம் செய்துகொண்டிருக்கும் இராணுவ குழு, அதே ரயிலில் பயணித்திருக்கும் பயங்கரவாதிகளின் கும்பலை எப்படி வீழ்த்தினார்கள் என்பது தான் கதை.
ராகவ் ஜுயல், லக்ஷயா தான்யா மனிக்தலா போன்றவர்கள் நடித்துள்ள இந்த படம் டிஸ்னி-ஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ளது.
பேட் பாய்ஸ் – ரைட் ஆர் டை(Bad Boys: Ride or Die)
வில் ஸ்மித் மற்றும் மார்ட்டின் லாரன்ஸ் நடிப்பில் திரையரங்கங்களில் சக்கப்போடு போட்ட பேட் பாய்ஸ் படத்தின் நான்காவது பாகம் இது.
இந்த படம் நெட்ஃபிலிக்ஸில் வெளியாகியுள்ளது.
அடியோஸ் அமீகோ – மலையாளம்
ஒரு பேருந்து நிறுத்தத்தில், இரு நபர்கள் சந்தித்துக்கொள்கிறார்கள். ஒருவர் பணக்காரர், மற்றொருவர் பணத்துக்காக மிகவும் கஷ்டப்படுபவர். இருவரும் சேர்ந்து ஒன்றாகப் பயணிக்கும் போது என்ன நடக்கிறது என்பதை படம் நகைச்சுவை கலந்து சொல்கிறது.
ஆசிஃப் அலி, சௌபின் ஷஹிர், அனகா போன்றவர்கள் நடித்துள்ள இந்த படம் நெட்ஃபிலிக்ஸில் வெளியாகியுள்ளது.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
Paralympics 2024: பாரிஸில் புதிய சாதனை படைத்த இந்தியா!
இறங்கிய தங்கம் விலை… இன்றைய நிலவரம்!
நிவின் பாலி மீதான பாலியல் புகார் : இயக்குநர்கள் சொன்ன தகவல்!