ஆஸ்கர் விருது வென்ற கீரவாணி…இசையமைத்த தமிழ் படங்கள்!

சினிமா

இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் வெளியாகி சூப்பர்ஹிட்டான ஆர்.ஆர்.ஆர். படத்தில் இடம் பெற்ற ‘நாட்டு நாட்டு’ பாடல் ஆஸ்கர் விருதை வென்றுள்ளது.

2023 ஆம் ஆண்டிற்கான 95-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள டால்பி தியேட்டரில் நடைபெற்று வருகிறது.

இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் ஆர்.ஆர்.ஆர் திரைப்படம், கடந்த 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 25-ம் தேதி 3 மொழிகளில் வெளியானது.

உலகளவில் பாராட்டை பெற்ற ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் பல்வேறு விருதுகளை குவித்த நிலையில், இன்று (மார்ச் 13 ) சினிமா துறையில் மிக உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருதை வென்றுள்ளது. கீரவாணி இசையில், சந்திரபோஸ் வரிகளில் உருவான ’ நாட்டு நாட்டு ’பாடல் சிறந்த ஒரிஜினல் பாடல் என்ற பிரிவில் இவ்விருதினை பெற்றுள்ளது.

இந்நிலையில், ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் எம்.எம். கீரவாணி குறித்து பார்ப்போம்.

ஆந்திர பிரதேச மாநிலம் கொவ்வூரில் 1961 ஆம் ஆண்டு பிறந்தவர் எம்.எம்.கீரவாணி.

சுமார் 150 படங்களுக்கும் மேல் இசையமைத்திருந்தாலும், தனது உறவினரும், இயக்குநருமான ராஜமெளலியின் பாகுபலி முதல் மற்றும் இரண்டாம் பாகம், ஆர்.ஆர்.ஆர் படங்கள் தான் அவரை உலகளவில் பிரபல இசையமைப்பாளராக மாற்றியது.

நாகர்ஜூனாவின் ’அன்னமயா’ திரைப்படம் இவருக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதையும் வென்று கொடுத்தது.

தொடர்ந்து ’நீ பாதி நான் பாதி’ , ’பாட்டொன்று கேட்டேன்’, ‘சிவந்த மலர்’, ‘சேவகன்’, ‘வானமே எல்லை’, ‘ஜாதி மல்லி’, ‘பிரதாப்’, ‘கொண்டாட்டம்’, ‘ஸ்டூடண்ட் நம்பர் 1’, ‘இஞ்சி இடுப்பழகி’ உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

மேலும், ’அழகன்’ படத்திற்காக தமிழ்நாடு மாநில விருதையும் அவர் பெற்றுள்ளார்.

பி.வாசுவின் ‘சந்திரமுகி 2’ படத்திலும் எம்.எம்.கீரவாணி இசையமைக்க உள்ளதாக கூறப்படுகிறது.

கீரவாணியின் மகன் கால பைரவா, பாடகர் ராகுல் ’நாட்டு நாட்டு’ பாடலை பாடியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மு.வா.ஜெகதீஸ் குமார்

ஆஸ்கரை வென்ற தமிழக குறும்படம்!

ஆஸ்கரை தட்டிச்சென்ற ‘நாட்டு நாட்டு’ !

+1
0
+1
0
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.