ஆஸ்கர் விருது: வாக்களித்த சூர்யா

சினிமா

95-வது ஆஸ்கர் விருது விழா வருகிற மார்ச் 12 ஆம் தேதி நடைபெற உள்ளது.

இந்த முறை ஆஸ்கர் விருதிற்கான ’ஒரிஜினல் பாடல்’ பிரிவின் இறுதிப்பட்டியலில் ஆர்ஆர்ஆர் படத்தில் இடம்பெற்ற ‘நாட்டுக்கூத்து’ பாடல் இடம் பெற்றள்ளது. பலரும் இப்பாடலுக்கு ஆஸ்கர் கிடைக்கும் என எதிர்பார்த்துள்ளனர்.

மேலும், செல்லோ ஷோ (Chhello Show) குஜராத்தி படமும் ஆல் தி பிரீத்ஸ் (All that Breathes) என்ற ஆவணப் படமும், தி எலிபேன்ட் விஸ்பரர்ஸ் (The Elephant Whisperers) என்ற ஆவணப் படமும் இந்தியா சார்பில் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.

ஆஸ்கர் விருது விழாவில் பங்கேற்கும் படங்களுக்கு ஆஸ்கர் கமிட்டி உறுப்பினர்கள் வாக்களிப்பது வழக்கம். அதிக அளவு வாக்குகளை பெறும் படங்களுக்கு விருதுகள் வழங்கப்படும்.

இந்த ஆண்டு ஆஸ்கர் விருது உறுப்பினர் குழுவில் புதிதாக 397 உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்தியா சார்பில் நடிகர் சூர்யா மற்றும் கஜோல் ஆகியோர் ஆஸ்கர் விருதுக்கு திரைப்படங்களை தேர்வு செய்யும் குழுவின் உறுப்பினர்களாக தேர்வாகியிருந்தனர்.

இந்த நிலையில், ஆஸ்கர் விருது கமிட்டியின் உறுப்பினரான சூர்யா தனது வாக்கினை பதிவு செய்துவிட்டதாக தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று (மார்ச் 8) தெரிவித்துள்ளார்.

இவர் நடிப்பில் வெளியான ஜெய் பீம் படம் கடந்த வருடம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மு.வா.ஜெகதீஸ் குமார்

பாஜகவிலிருந்து அதிமுகவுக்கு கிளம்பிய அடுத்த 13 பேர்!

மகளிர் தினம்: பெண் காவலர்களை பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

+1
0
+1
0
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *