94-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் சிறந்த படம், நடிகர், துணை நடிகர், ஒளிப்பதிவு, படத்தொகுப்பு உள்ளிட்ட 7 விருதுகளை ‘ஓப்பன்ஹைமர்’ படம் தட்டிச்சென்றுள்ளது. இதனை தொடர்ந்து சிறந்த நடிகை, ஆடை வடிவமைப்பு, ஒப்பனை ஆகிய மூன்று பிரிவுகளில் ‘Poor Things’ படம் விருதுகளை வென்றுள்ளது. oppenheimer wins 7 awards
94-வது ஆஸ்கர் விருதுகள் முழு விவரம்!
சிறந்த படம்: ஓப்பன்ஹைமர்
சிறந்த இயக்குனர்: கிறிஸ்டோபர் நோலன், (ஓப்பன்ஹைமர்)
சிறந்த நடிகை: எம்மா ஸ்டோன், (Poor Things)
சிறந்த நடிகர்: சிலியன் மர்பி, (ஓப்பன்ஹைமர்)
சிறந்த துணை நடிகை: டாவின் ஜாய் ராண்டால்ப், (தி ஹோல்டோவர்ஸ்)
சிறந்த துணை நடிகர்: ராபர்ட் டவுனி ஜூனியர், (ஓப்பன்ஹைமர்)
சிறந்த திரைக்கதை: ஜஸ்டின் ட்ரைட் மற்றும் ஆர்தர் ஹராரி, (அனாடமி ஆஃப் எ ஃபால்)
சிறந்த தழுவல் திரைக்கதை: கார்ட் ஜெபர்சன், (அமெரிக்கன் ஃபிக்ஷன்)
சிறந்த சர்வதேச படம்: தி சோன் ஆஃப் இன்ட்ரஸ்ட்
சிறந்த அனிமேஷன் படம்: தி பாய் அண்ட் தி ஹெரான்
சிறந்த இசை: லுட்விக் கோரன்சன், (ஓபன்ஹைமர்)
சிறந்த பாடல்: பில்லி எலிஷ் மற்றும் ஃபின்னியாஸ் ( பார்பி படத்தில் இடம்பெற்ற O’Connell for What Was I Made For? பாடல்)
சிறந்த ஆவணப்படம்: 20 டேஸ் இன் மரியுபோல்
சிறந்த ஆவணப்பட குறும்படம்: தி லாஸ்ட் ரிப்பேர் ஷாப்
சிறந்த லைவ் ஆக்ஷன் குறும்படம்: தி வொண்டர்ஃபுல் ஸ்டோரி ஆஃப் ஹென்றி சுகர்
சிறந்த அனிமேஷன் குறும்படம்: வார் இஸ் ஓவர்
சிறந்த ஒலிப்பதிவு: தி சோன் ஆஃப் இன்ட்ரஸ்ட்
சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு: Poor Things
சிறந்த படத்தொகுப்பு: ஓப்பன்ஹைமர்
சிறந்த ஆடை வடிவமைப்பு: : Poor Things
சிறந்த ஒப்பனை: Poor Things
சிறந்த ஒளிப்பதிவு: ஓப்பன்ஹைமர்
சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ்: காட்ஜில்லா மைனஸ் ஒன்
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…