தமிழ் திரைப்படங்களுக்கு, அதில் நடித்த நட்சத்திரங்கள், பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்கள் இவர்களில் சிறந்தவர்களை தேர்வு செய்து உள்நாட்டில் மத்திய, மாநில அரசுகள் விருதுகள் வழங்கிவந்தன. இந்திய திரைப்படங்கள் உலகம் முழுவதும் திரையிடப்படுகின்றன.
ஓடிடி தொழில்நுட்ப வருகைக்கு பின் 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் எல்லா மொழி படங்களையும் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கிறது. இதனால் தமிழர்கள் வாழும் நாடுகளில் தமிழ் திரைப்படங்களுக்கு விருதுகள் வழங்கும் விழாக்களை ஒவ்வொரு வருடமும் நடத்தி வருகின்றனர். அப்படி ஒரு விருது அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
ஜப்பான் நாட்டில் தமிழ் திரைப்படங்களை அங்கீகரிக்கும் விதமாக ஆண்டுதோறும் ‘ஒசாகா தமிழ் சர்வதேச திரைப்பட விழா’ நடத்தப்படுகிறது. இதில் சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இயக்குநர், சிறந்த படம் என பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படுகிறது. அந்த வகையில் கடந்த 2021 வெளியான தமிழ் திரைப்படங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

விருதுக்கு தேர்வான திரைப்படங்கள், கலைஞர்கள்
சிறந்த தமிழ் திரைப்படம் – சார்பட்டா பரம்பரை
சிறந்த நடிகர் – விஜய் (மாஸ்டர்)
சிறந்த நடிகை – கங்கனா ரனாவத் (தலைவி)
சிறந்த இசையமைப்பாளர் – யுவன்சங்கர் ராஜா (மாநாடு)
சிறந்த ஒளிப்பதிவு – தேனி ஈஸ்வர் (கர்ணன்)
சிறந்த இயக்குநர் – பா.ரஞ்சித் (சார்பட்டா பரம்பரை)
சிறந்த திரைக்கதை – வெங்கட் பிரபு (மாநாடு)
சிறந்த தயாரிப்பு நிறுவனங்கள் – ஒய் நாட் ஸ்டூடியோஸ்,
ரிலையன்ஸ் எண்டர்டெயின்மெண்ட்,
ஓபன் விண்டோ புரொடக்ஷன்ஸ், விஷ்பெர்ரி பிலிம்ஸ்
சிறந்த நடன அமைப்பு – தினேஷ் குமார் (மாஸ்டர் – வாத்தி கம்மிங்)
சிறந்த துணை நடிகர் – மணிகண்டன் (ஜெய் பீம்)
சிறந்த துணை நடிகை – லிஜோமோல் ஜோஸ் (ஜெய் பீம்)
சிறந்த நகைச்சுவை நடிகர் – ரெடின் கிங்ஸ்லி (டாக்டர்)
சிறந்த குழந்தை நட்சத்திரம் – சாரா வின்சென்ட் (டாக்டர்)
சிறந்த வில்லன் – விஜய் சேதுபதி (மாஸ்டர்)
சிறந்த படத்தொகுப்பு – பிரவீன் கே.எல் (மாநாடு)
சிறந்த சண்டை அமைப்பு – திலீப் சுப்பராயன் (சுல்தான்)
சிறந்த கலை அமைப்பு – ராமலிங்கம் (சார்பட்டா பரம்பரை)
சிறந்த VFX குழு – Nxgen மீடியா (டெடி)
சிறந்த ஒலி வடிவமைப்பு – உதய் குமார் (அரண்மனை 3)
சிறப்பு விருது – மண்டேலா
இராமானுஜம்
அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!