தமிழில் அப்பாச்சி கிராமம், தெலுங்கில் ரவி தேஜாவின் டிஸ்கோ ராஜா போன்ற படங்களை இயக்கியவர் VI ஆனந்த. பொதுவாகவே இவரது படங்கள் ஃபேண்டஸி கதையம்சம் கொண்ட படமாக தான் இருக்கும். அந்த வகையில் தற்போது இவரது இயக்கத்தில் உருவாகியுள்ள மற்றொரு ஃபேண்டஸி படம் “ஊரு பேரு பைரவகோனா”. இந்த படத்தை AK எண்டர்டெயின்மெண்டஸ் மற்றும் ஹாஸ்யா மூவீஸ் ஆகிய இரு நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது.
இந்த படத்தில் சந்தீப் கிஷன் ஹீரோவாக நடித்துள்ளார். சமீபத்தில் கேப்டன் மில்லர் படத்தில் இவரது நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது.
ஊரு பேரு பைரவகோனா படத்தில் சந்தீப் கிஷனுடன் காவியா தப்பர், வர்ஷா பொல்லம்மா, வெண்ணிலா கிஷோர் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். தற்போது இந்த படத்தின் டிரைலர் வெளியாகி இருக்கிறது.
பைரவகோனா என்ற கிராமத்தில் பல அமானுஷ்யமான விஷயங்கள் நடக்கிறது, அதன் பின்னணியில் இருக்கும் மர்மத்தை ஹீரோ கண்டுபிடித்தாரா இல்லையா என்பதே இந்த படத்தின் ஒன் லைன். இந்த படம் வரும் பிப்ரவரி 9 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
– கார்த்திக் ராஜா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
திடீரென்று உயர்ந்த தங்கம் விலை: இன்றைய நிலவரம்!
வேலைவாய்ப்பு : உயர் நீதிமன்றத்தில் பணி!
அன்னபூரணி பட சர்ச்சை: நயன்தாரா வருத்தம்!
பியூட்டி டிப்ஸ்: வியர்வையால் வேதனையா? எளிய தீர்வுகள் இதோ…