வரும் ஜூன் 21 ஆம் தேதி ரசவாதி திரைப்படம் ஓடிடியில் வெளியாகிறது.
மௌன குரு, மகாமுனி போன்ற திரைப்படங்களின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் இயக்குநர் சாந்தகுமார் இயக்கத்தில் வெளியான படம் ரசவாதி.
இந்த படத்தில் அர்ஜூன் தாஸ், சுஜித் சங்கர், தான்யா ரவிச்சந்திரன், ரேஷ்மா வெங்கடேஷ், ரிஷிகாந்த், ரம்யா, ஜி.எம் சுந்தர் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
சரவண இளவரசு சிவா இணைந்து ஒளிப்பதிவு செய்துள்ளனர்.
கடந்த மே 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.
இப்படத்தில் வில்லனாக நடித்த சுஜித் சங்கர் கவனம் பெற்றார்.
சித்த வைத்தியராக சதாசிவ பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் நடித்த அர்ஜுன் தாஸ் சந்திக்கும் பிரச்னைகளே படத்தின் கரு.
இந்நிலையில் இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
ரசவாதி திரைப்படம் வரும் ஜூன் 21ஆம் தேதி ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது,
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
விமர்சனம் :’ ரசவாதி ‘!
மாநில அந்தஸ்தை இழந்து மாம்பழம் சின்னம் கோரும் பாமக
ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுநர், நடத்துநர்களை தேடும் நெல்லை SETC!